(Reading time: 25 - 50 minutes)

உனக்கு தானே என் மேல கோபம்….. எனக்கு உன் மேல கோபம் இல்லில்ல…எனக்கு கிஸ் பண்ணனும்னு தோணுச்சு பண்ணினேன். அதுக்கெல்லாம் உன் கிட்ட கேட்டுட்டு இருக்க முடியுமா? தேர்ந்த பிசினஸ்மேனாக நன்றாக குழப்பினான் அவளை..

அப்ப நான் இப்ப உங்களை அடிக்கலாம் திட்டலாம் என்னவேணா செய்யலாமில்ல..பொறுங்க இப்ப உங்களுக்கு அடி இருக்கு , கோபத்தில் அவன் முதுகில் பக்கத்தில் இருந்த தலையணைக் கொண்டு ஐந்தாறு மொத்தினாள்.

தலைப் பக்கம் கைகளைக் கொண்டுச் சென்று அவன் முடியை பிடித்து ஆட்டவா என யோசித்தவள் அவனைப் பாவம் பார்த்து விட்டு விட்டாள். அடி வாங்கியவன் தெம்பாய் உட்கார்ந்திருக்க அடித்தவள் தான் கோபம் தீராமல் முறைத்தவளாய் மூச்சு வாங்கிக் கொண்டவளாக களைப்பாய் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

இப்போ என்ன இன்னும் கோபம் தீரலியா? என்றான் ரூபன் சிரிப்பு மாறாமலே,

எங்க போனீங்கன்னு சொல்லிட்டு போகலை, போனவங்க எனக்கு தினமும் ஃபோனும் செய்யலை. என்ன வேலையா போயிருக்கீங்கன்னு  கேட்டா பதிலும் சொல்லுறதில்லை………….வரிசையாக அவன் குற்றங்களை அடுக்கியவள்………

இன்னிக்கு திரும்ப வந்தும் கூட உங்களுக்கு என்னை உடனே பார்க்க வர தோணலில்ல என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

சாரிம்மா நாளைக்கு எக்ஸ்போர்ட் அனுப்ப வேண்டிய நாள்……. பாவம் ஜீவன் தனியா எவ்வளவு கவனிப்பான். இப்ப கூட வர முடியாதோன்னு நினைச்சேன். இன்னிக்கு எல்லாம் ரெடியாகிட்டதா போன் வரவும் வாங்கிட்டு இங்கயே வந்திட்டேன். என்றவனாய் எழுந்து கொண்டு வந்திருந்த பேகை தூக்கி வந்தான்.

என்னதிது? கேள்வியாய் விரிந்தது அவள் கண்கள்.

கட்டிலில் பேகை கோண்டுச் சென்றவன் ஒவ்வொன்றாய் எடுத்தான். விரித்தான். பரப்பி வைத்தான் எல்லாம் என்னோட சாய்ஸ் அனிம்மா, உனக்கு எது பிடிக்கலைன்னாலும் சொல்லு மாத்திடலாம். அதான் நம்ம மேரேஜிக்கு ஒன் மந்த் போல இருக்கே என்றவனை விழி இமைக்காமல் பார்த்து வைத்தாள் அனிக்கா.

அவளுக்காக பார்த்து பார்த்து தங்க நகைகளாக வாங்கிக் குவித்திருந்தான் அவன். அத்தனையும் டிசைனும் , அழகும் கருத்தைக் கவர்ந்தது. நெற்றிச் சுட்டி முதலாக கம்மல், மாட்டி, நெக்லஸ், ஆரம், வளையல்கள் என அவள் முன்னே கடைப்பரப்பி வைத்திருந்தான். அவளுக்கு அத்தனையும் பிடித்திருக்கின்றதா என்னும் ஆர்வத்தில் அவன் அவளைப் பார்த்திருக்க, அவளுக்கோ கண்ணீர் துளிர்த்து கண்களில் தேங்கி நின்றுக் கொண்டிருந்தது.

ஹேய் குட்டி, உனக்கு பிடிக்கலியா? என அருகில் வந்துக் கேட்டவனிடம்

எப்பவும் உங்களுக்கு இதே வேலையாப் போச்சு…..என்றவளின் குரல் கமற உணர்ச்சி வசத்தில் கண்ணீர் தெரித்தது.

ஏய் இதென்ன அழுகை பொறுக்கவியலாதவனாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

நீ எப்பலருந்து இப்படி அழுகாச்சியா மாறுன அனி….தாங்க முடிலடி ..சும்மா சும்மா அழாத………யாராவது நகை வாங்கிக் கொடுத்தா உன்னை மாதிரி அழுவாங்களா…. லூசு

நானா லூசு , நீங்கதான் லூசு அழுகையோடும் அவனை திட்டிக் கோண்டிருந்தாள்.

ஏன் இப்ப உனக்கு என்ன தான்மா பிரச்சினை…….

உங்களை யாரு இப்ப நகையெல்லாம் வாங்கிட்டு வரச்சொன்னது…….

ஏன் எனக்கு ஆசை நான் வாங்கித் தாரேன் உனக்கு போடுறதுக்கு என்ன? ஊர் உலகத்தில பொண்டாட்டிக்கு எவனும் நகையே வாங்கிக் கொடுக்கலியா? சும்மா தொண தொணன்னுட்டு …..

யாரும் உங்களை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கிட்டெல்லாம் வர மாட்டாங்க…… பொண்ணுங்களுக்கு அப்பாதான் கல்யாணத்துக்கு நகை செய்வாங்க….

இப்ப என்னாச்சு நாம கொஞ்சம் வித்யாசமா தான் செய்வோமே இதுக்கெல்லாம் இப்படியா கண்ணீர் விடுவ………போய் முகத்தை கழுவிட்டு வா……

இல்ல நீங்க பேச்ச மாத்தாதீங்க…….. இன்னொரு விஷயம் கேட்கணும்  உங்க கிட்ட……. அதையும் கேட்டதிலிருந்து எனக்கு கஷ்டமா இருக்கு அதையும் சொல்லிடறேன். கண்களை துடைத்துக் கொண்டிருந்தவள் முகத்தை தன் கர்ச்சீப் எடுத்து துடைத்து விட்டான்.

சொல்லு அழுகுணி சீக்கிரம் சொல்லு…………நகை வாங்கிட்டு வரப்போ என்னென்னவோ எதிர்பார்த்தேன் சத்தியமா இதை எதிர்பார்க்கலடி….என்றான் கடுப்பாக….

அது எனக்கு அப்பா மூலமா தெரிஞ்சது என ஆரம்பிக்கவும், என் அருமை மாமா தன் மக கிட்ட என்ன சொல்லி வச்சாரோ என சட்டென்று திகைத்தவன், அவர் தன்னிலும் பெரிய அழுத்தமானவர் என்று நியாபகத்திற்கு வர சுதாரித்தான்.

அனிக்கா சொல்ல ஆரம்பித்தாள்,

அன்னிக்கு சாலரி டேன்னு என் கிட்ட சைன் வாங்க சுரேஷ் வந்தாரில்லையா? சுரேஷ் ரூபன் ஃபேக்டரியில் பணிபுரிபவன் பேங்க் சம்பந்தப்பட்ட வேலையெல்லாம் பார்த்துக் கொள்பவன்.

ரூபன் சென்ற வேலை இழுத்துக் கொண்டே சென்றதால் சாலரி நாளுக்கு முன்பே வருவதாக எண்ணியும் வர முடியவில்லை. அப்போது தான் அவன் சுரேஷை அவளிடம் கையெழுத்து வாங்கச் சொன்னது நியாபகத்திற்கு வந்தது. அதுக்கும் இவ இப்படி இமோஷனல் ஆகிறதுக்கும் என்ன சம்பந்தம் என்று விழித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.