(Reading time: 25 - 50 minutes)

அதெல்லாம் ஒண்ணுமில்ல இப்ப எனக்கு லவ்……. மேரேஜுன்னு யோசிக்க வேண்டிய வயசில்ல, எனக்குன்னு முதல்ல எதையாவது சாதிக்கணும், அதுக்கப்புறம் தான் எல்லாம்.

ஓ…. என்றனர் இருவரும்……

நாங்க ரெண்டு பேரும் சேம் ஏஜ் க்ரூப்……

அதனால என்ன?

உனக்கும் அனிக்கும் ஏஜ் டிஃபரன்ஸ் இருந்ததால் உனக்கு உன்னோட கோல்ஸ் அச்சீவ் பண்ணிட்டு மேரேஜ் யோசிக்க டைம் இருந்தா மாதிரி எனக்கு டைம் இருக்காதே……. என்றான் ரூபனைப் பார்த்து…..

அதுக்காக எனக்காக காத்திட்டுன்னு இருன்னு அவக்கிட்ட சொல்லிட்டு வருஷக் கணக்கா இழுக்கிறது எப்படி நியாயம் ஆகும்? அவ லைஃபை எதுக்கு நடுவில இழுக்கணும்னு தோணுச்சு அதனால தான் அவக்கிட்ட என்னால வெளிப்படையா எதுவும் பேச முடியலை…….

சரி இப்போ உன்னோட லைஃபை செட்டில் பண்ண உனக்கு எவ்வளவு வருஷம் வேணும் , ஒரு ரெண்டு வருஷம் போதுமா? பாய்ஸ் 25 ஆர் 26 ல மேரேஜ் செய்யலாம் தப்பில்ல.. என்னச் சொல்லுற நீ?

2 இயர்ஸா அதுக்குள்ள எப்படி? என்று புருவம் நெறித்தவனை

சரி நான் இப்போ உன் அண்ணனுக்கு மவுத் பீஸ் ஏன்னா உங்க அண்ணனுக்கு என் அளவுக்கு சரியா பேசத் தெரியாது எனக் கூறவும், பேசி பேசியே எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் கிளையண்ட்களை சமாளிக்கின்ற தன் அண்ணனைக் குறித்து குறைச் சொல்பவளைப் பார்த்து முறுவல் பூக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

சரி சொல்லுங்க அண்ணி…. என பணிந்தான்.

இப்போ உனக்கு ஒரு ஃபேக்டரி கை வசம் வருதுன்னு வச்சுக்கோ, கூடவே பல்கா நிறைய ஆர்டர்ஸிம் வருதுன்னு வச்சுக்கோ…

இப்பன்னா இப்ப ஒன் ஆர் டூ மந்த்ஸ்ல அப்படின்னா உனக்கு உன் கோல்ஸ் அச்சீவ் செய்ய 2 இயர்ஸ் போதும்ல… எனவும்,

அவள் சொல்ல வந்ததை ரூபன் விளக்கினான். தாங்கள் முன்பு ஃபேக்டரி நடத்திக் கொண்டிருக்கும் இடம் மறுபடி அவர்களுக்கு நடத்த தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும், நெடு நாளாக தான் முயற்சி செய்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும், கடந்த நாட்களில் அதற்காகவே அவன் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தான்.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு என்னச் சொல்வதென்றேப் புரியவில்லை. தானும் அண்ணனைப் போலவே ஃபேக்டரி ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும், அது அண்ணனுக்கு எதிரான செயலாக, போட்டியாக கருதப் படுமோ என்ற சிந்தனை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. இப்போது எல்லாவற்றையும் தயார் செய்து தன் கனவை லகுவாக்கியவன் குறித்தும் , அதை அவனை விட மகிழ்ச்சியாக கொண்டாடுபவள் குறித்தும் மனம் பெருமையில் விம்மியது.

இது நல்ல ஐடியா இல்லை அத்தான்….நம்மளுக்கு வேலை அதிகமானா நாம ஜீவன் ஃபேக்டரிக்கு வேலை அனுப்பி வைச்சிரலாம்…….இல்லை அவன் ஆர்டர்ஸ் முடிக்க முடியலைன்னா நாம அதை செஞ்சுக் கொடுக்கலாம்…என வேலை நுணுக்கம் புரியா விட்டாலும் உற்சாகத்தில் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள் அனிக்கா.

ஏன் அண்ணா இதுக்கெல்லாம் பணம்……… என்று நிகழ்காலத்தில் சடுதியில் திரும்பிய ஜீவன் கேள்வி கேட்க,

அதெல்லாம் நான் பார்த்துப்பேன் ஜீவா……….உனக்கு நல்ல ஸ்கில்ஸ் இருக்கு உன்னால நல்லா மேனேஜ் செய்ய முடியும், ஆல் தி பெஸ்ட் டா….

என்றவனாக தம்பியின் இருக்கை எதிரே வந்தவன் அவன் எழுந்து நிற்கவும் அணைத்துக் கொண்டான்.

தேங்க்ஸ்லாம் நான் சொல்ல போறதில்ல …நீ என் அண்ணாவாச்சே உனக்கு எதுக்கு தேங்க்ஸ்லாம் ….ஆனா, எல்லா கணக்கும் எனக்கு தெரியணும்….  நான் சீக்கிரம் திரும்ப தந்திடுவேன் அண்ணா.. என்றான் நெகிழ்ந்தவனாய்.

அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றுப் பட்டுக் கத்தரித்தான் ரூபன்.

ஹேய் நானும் என்று அவர்களோடு அனிக்காவும் இணையச் செல்ல தம்பியோடு இணைந்து நின்ற ரூபனின் மறுபக்கம் அவன் அணைப்பில் அவளும் நிற்க அழகிய காட்சியாய் இருந்தது அது, அந்த நாளை நியாபகப் படுத்திக் கொள்ள வேண்டி அதனை அவர்கள் செல்ஃபீக்களாக எடுத்துத் தள்ளினர்.

அதெல்லாம் சரி இனி எங்கேயும் அலையாதே அண்ணா மெரேஜ் வரைக்கும் கொஞ்சம் ரெஸ்டா இரு, இப்படியே அலைஞ்சுகிட்டே இருந்தா மேரேஜ் அன்னைக்கு உன்னோட ஃபேஸ் எப்படி இருக்க போகுதுன்னு பூஜா மேம் சொன்னதை மாதிரி ஆகிடாம..... என அண்ணனை சீண்டியவன்,

கேமெரா பக்கம் திரும்பி…. என் அண்ணன் மேரேஜிக்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். எல்லோரும் மறக்காம வந்திடுங்க……. என்று கரம் குவித்தான்.

பின்னே அனியும், ரூபனும் புன்னகைத்து நின்றனர்.

தொடரும்

Episode # 34

Episode # 36

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.