(Reading time: 25 - 50 minutes)

அப்ப தான் அப்பா என் கிட்ட ஏன் நீ சைன் போடறன்னு கேட்டாங்க, நான் தான் அப்பா முன்னாடி அக்கவுண்ட்ஸ் முழுசும் பார்த்துட்டு இருந்தேன் அதனால சைன் கேட்கிறாங்க போலனு சொன்னேன். அப்ப நம்பாம போய் எப்படியோ விபரம் தேடிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் கிட்ட கூட சொல்லலை அம்மா கிட்ட தான் சொல்லிட்டு இருந்தாங்க , நீங்க என்னை ஃபேக்டரி பார்ட்னரா சேர்த்திருக்கீங்களாம்………அப்படியா….முட்டைக் கண்ணை விரித்து கேட்டவளை என்னென்னவோ செய்ய ஆசை வந்தது ரூபனுக்கு.

அதுக்கு? என்றான் ரூபன் அமுக்கிணியாக…..

இப்ப கூட உருப்படியா எதையும் சொல்றீங்களா? நானா தான் கேட்டுட்டு இருக்கேன். இப்ப எதுக்கு என்னை பாட்னரா ஆக்கணும், பாவம் ஜீவன் தானே உங்க கூட எஃபர்ட் போட்டு வேலை செய்யுறான், நியாயமா நீங்க அவனுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்திருக்கணும் எனக்கு போயி……..இப்ப அத்தை என்ன நினைச்சுப்பாங்க , நம்ம வீட்ல எல்லோரும் என்ன நினைச்சுப்பாங்க…… கல்யாணத்துக்கு முந்தியே இப்படின்னு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா? உதட்டை சிறு பிள்ளையாய் பிதுக்கியவளை…..

சரி சொல்லறது எல்லாம் சொல்லிட்டியா நீ போய் முகத்தை கழுவிட்டு வா , நான் பதில் சொல்றேன். உன் ரூம்ல எதுவும் ஸ்னாக்ஸ் வச்சிருந்தா தந்துட்டு போ…வேலை பாக்கிறப்போ கூட இவ்ளோ டயர்ட் ஆவலை உன் கிட்ட பேசி, உன் கண்ணீரைப் பார்த்து ரொம்ப டயர்ஃட் ஆயிட்டு…பசிக்குது என்றவனை முறைத்து பவுலில் இருந்த திராட்சைப் பழங்களை மறுபடி ஒரு முறை கழுவி வைத்தவள் , ஆப்பிளையும் கழுவி கத்தியோடு அவன் முன் வைத்தாள்.

முறைப்போடே முகம் கழுவச் சென்றாள், திரும்ப வந்து அவனருகே அமர்ந்தாள், அவனோ இப்போது தான் ரசித்து ருசித்து பழங்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏய் என்ன பார்க்கிற மாமனார் வீட்ல கொஞ்சம் ரிலாக்ஸா     சாப்பிட விடு, முறைச்சு முறைச்சு பார்த்து கண்ண வச்சுக்கிட்டு என்றவனை இன்னும் முறைத்தாள்.

அமைதியாக சாப்பிட்டு முடித்தவன் நிதானமாக பேச தொடங்கினான்.

அனி உனக்கு மொத கவலை வீட்ல என்ன சொல்வாங்கன்னு இருந்தா, அத மொத்தமா தொடச்சி தூரப் போடு. ஏன்னா நகை வாங்கிறப்போ நான் வீட்ல சொல்லித்தான் வாங்கினேன். அம்மாவ கூட கூட்டிட்டு போயிருந்தேன் ஜீவனுக்கும் இது தெரியும். யாரையும் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன்.

இது உனக்கொரு ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு பார்த்தேன். கல்யாணத்துக்கு பிறகுதான் வாங்கிக் கொடுக்கணும்னு எதுவும் ரூல்ஸ் இல்லடா, என் வைஃப் கு நான் எப்ப வேணா வாங்கி கொடுப்பேன்…..என் இஷ்டம் அதில யார் என்னச் சொல்லுறது……  

முன்னேயெல்லாம் ஜீவன் எப்பவும் என் கிட்ட “மாமா நீ அவங்க சொத்துக்கு ஆசைப்பட்டுதான் பொண்ணு கேட்கிறேன்னு” சொல்ல போறார்னு சொல்லிட்டே இருப்பான்…….அப்பவே நினைச்சு வச்சதுதான் இது.

கல்யாணத்துக்கு நகை முதலா நானே செஞ்சுக்கிறேன் மாமா நீங்க பொண்ணு தந்தா போதும்னு சொல்லி பொண்ணு கேட்கணும்னு நினைச்சிருந்தேன். நான் செஞ்ச நகை மட்டும் போட்டு உன்னைக் கட்டிக்கணும்னு நினைப்பேன்……… இப்போ இதெல்லாம் சொல்லப் போனா எங்க பொண்ணுக்கு எங்களை நகை போடாதன்னா சொல்லறன்னு உங்க அப்பா விட்டாலும் அண்ணா என்னை அடிக்கவே வந்திடுவாங்க சிரித்தவனை என் அப்பாவையும் அண்ணனையுமா சொல்ற என்று கண்கள் இடுங்க பார்த்தாள்.

இந்த மொறைப்பை கொஞ்சம் விடுடி , அதான் லைஃப் முழுக்க டைம் இருக்கே என்னை முறைக்கிறதுக்கு, கொஞ்சம் ஃபேஸ மாத்து என்றவனிடம் ஈ என செயற்கையாக இளித்து வைத்தாள்.

அந்த பார்ட்னர்ஷிப் விஷயம் உன் கிட்ட வேணும்னே எல்லாம் மறைக்கலை அனி, வேலை வேலைன்னு ஓடி கிட்டு இருந்ததில சொல்ல டைம் கிடைக்கலை ……கல்யாணத்துக்கு அப்புறம் நிதானமா சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். நீ சொன்ன மாதிரி அந்த விஷயத்திலயும் வீட்டுல யாரும் ஒண்ணும் நினைக்க போறதில்ல, அப்படி நினைக்கிறதில நியாயமும் இல்லை.

எனக்கு பிசினஸ் ஆரம்பிக்க அண்ணன் பணம் தந்தார் தெரியுமில்ல…

தலையை ஆட்டியவளாய் பதிலிருத்தாள் அனிக்கா.

அதுக்கப்புறம் கொஞ்ச வருஷத்தில நானும் எல்லாம் திரும்ப கொடுத்திட்டேன்….

என்னச் சொல்ல வருகிறான் என்றவளாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்னிக்கு அண்ணாவோட சப்போர்ட், பணம் எல்லாம் இல்லைனா நான் இன்னிக்கு ஒரு ஸ்டேஜிக்கு வந்திருக்க முடியாது. இதுதான் அண்ணன் தம்பிக்கு இடையே இருக்க வேண்டிய ஒன்னு…

ஏதோ சொல்ல வந்தவளை அவள் உதடுகளில் விரல் வைத்து நிறுத்தினான்.

பொறு நான் சொல்லி முடிச்சிடுறேன், லாஸ்ட் இயர் அண்ணா ஊர்ல வீடு கட்டினான்ல அது யார் பேருக்கு இருக்குன்னு தெரியுமா? இல்லை இப்போ ஃப்ளாட் வாங்கினான்ல அது யார் பேருக்கு வாங்கினான்னு தெரியுமா?

ம்ம்.. என்றவளை பேச விடாமல் தொடர்ந்தான்.

ஊர்ல இருக்கற்து எல்லாம் அவன் பேர்ல இருந்தாலும் , அண்ணி பேருக்கு ஃப்ளாட் வாங்கிருக்கான், இதை யாராவது தப்புன்னு சொல்வாங்களா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.