(Reading time: 16 - 32 minutes)

"ம்.. அவங்க வீட்டு வாழைத்தோப்புலதான் பாம்புக் கடிச்சி உசுருப் போயிருக்கு.. இது சகஜம்தானே.. எல்லாம் நம்ம நேரம்தான்.. ஏதோ இந்த வருஷம் வானம் பொய்க்கலைன்னு சந்தோஷப்பட்டாருப் பெரியவரு.. பாரு இன்னும் எத்தனை நேரமோ?.. போவப் போற உசிரை நாம காப்பாத்த என்ன கடவுளா?.. பேசாமா டவுனுக்குப் போய் வேலைச் செஞ்சிப் பொழச்சிக்கலாம்ல.. இப்படி எது கடிக்கும், எது கொத்தும்னுப் பயப்பட வேணாமில்ல?.. இனி நம்ம பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைக்கவேண்டியதானில்ல.. இப்படிப் பைசா பெறாத நிலத்தை நம்பி.. பாரு இன்னிக்குப் பெரிசுக்கே இன்னிக்கு இந்தக் கதின்னா.." எதையோ உளறிக் கொண்டிருந்தது ஒரு பெரிசு..

"ஏலே.. எதை எப்பப் பேசிட்டு.. வாயை மூடுலே.. ஏன் இந்த வருஷம் நல்லாதானே நீயும் காசு பார்த்திருக்கே.. எப்பவோ ஒண்ணு இப்படி அசம்பாவிதம் நடந்தா.. நம்ம வயித்துக்குச் சோறு போடறப் பூமியை இப்படிப் பேசுவியா.. மொதல்ல பெரிசப் பாரு.. வைத்தியனுக்குச் சொல்லி விட்டியே?.. என்னாச்சு?.." மற்றொரு பெரிசு உளறியவனை அடக்க..

விவசாயத்தில் பெரிதாக ஈடுபாடில்லாத நல்லசிவத்தின் மகன் முத்துசாமி அந்த ஊரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு அவரின் பேச்சு ஏனோ பசுமரத்தாணி போல நெருடத் தொடங்கியது.. தன் மகனை எப்படியாவது நல்ல படிப்புப் படிக்க வைத்துப் பெரியாளாக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டார்.. போதும் தங்களுடன் இந்த விவசாயம் என அன்றே முடிவெடுத்துவிட்டார்.

ஆனால் நல்லசிவமோ மகனின் மனதை அறிந்தவர் போல இறக்கும் முன் தன் பேரன் சிங்காரவேலனின் கைகளைப் பிடித்து யாருக்காவும் தன் உயிர் போன்ற விவசாயத்தை, வாழ்வாதாரத்தை என்றும் கைவிடக்கூடாது என்று வாக்குறுதிப் பெற்றுக் கொள்ள.. எட்டு வயசுச் சிறுவனோ தன் பாட்டன் சொன்னதை அப்படியே மனதில் பிடித்துக் கொண்டான்.

தன் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்த ஆறு வயது எழிலரசனும், ஐந்து வயது தழிரசியும் ஒன்றும் புரியாமல் அங்கே ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த கூட்டத்தை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிங்காரவேலன் தன் பாட்டன் சொல்லைக் கடைப்பிடித்தானா?.. வாழ்க்கை அவனுக்கு என்ன வைத்திருக்கிறது?.. உயிராய் மதிக்கச் சொன்ன விவசாயம் அவன் கைகளில் கிட்டியதா?.. முத்துசாமியும், மங்கையர்க்கரசியும் தன் பிள்ளையின் ஆசைக்கு இணங்கினார்களா?..

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்.. பின் கடவுளுக்கு அங்கே வேலை இல்லையே?.. யாருக்கு என்ன விதித்திருக்கிறதோ..

வாருங்கள் இனி கதையுடன் பயணிப்போம்...

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1138}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.