(Reading time: 19 - 37 minutes)

‘என் அப்பாவா??? இவர் என் அப்பாவா??? இவர் எப்படி வந்தார் மறுபடியும்???  என் அப்பா மறுபடியும் என் மடியிலா??? எப்படி அது??? நிஜமாகவா??? நிஜமாகவா??? இதை விட சொர்க்கம் வேறொன்று இருக்கிறதா??? நம்பவே முடியாமல் மறுபடி மறுபடி தலையை குலுக்கிக்கொண்டு அவர் முகம் பார்த்தான் விவேக்.

உடல் முழுவதும் வெள்ளை துணியால் மூடப்பட்டிருக்க அதன் மேலாக ரோஜாப்பூவும், ரோஜாப்பூ மாலைகளுமாகத்தானே கடைசியாக என் மடியில் படுத்திருந்தார் அப்பா. அந்த பூக்களின் வாசமே எப்போதும் அந்த காட்சியின் நினைவை எனக்குள் கொண்டு வந்து சேர்க்குமே!!! அப்போது அவர் நெற்றியிலும் கை காலிலும் இதே போல் கட்டுக்கள் இருந்தது.

‘ஆம்!!! இவர் என் அப்பாவேதான்!!!’ நெகிழ்ச்சி மேலோங்க கண்களில் கண்ணீர் திரையிட அவரை மறுபடியும் அழைத்தான்

‘அப்....பா!!!’ அரை மயக்க நிலை தாமோதரனுக்கு. எதுவும் புரியவில்லை

‘அப்....பா..’ அவன் மறுபடியும் அழைக்க, எதுவுமே புரியவில்லை  என்றாலும்  அந்த அழைப்பில் இருந்த இதம் பாசம் அந்த தந்தையையும் நிறையவே நெகிழ்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும். கஷ்டபட்டு விழிகளை விரித்து அவன் முகம் பார்த்தார்.

அவன் யாரென புரியவில்லை தொண்டை வரண்டது போல் இருக்க ‘எனக்கு தண்ணி....’ அவர் மெல்ல கேட்க

‘ஆங்.....இதோ..’ மெது மெதுவாய் அவர் வாயில் நீரை ஊற்றினான் விவேக்.

தாமோதரன் அவரது மனைவி இருந்த போது உணர்ந்தது இப்படி ஒரு இதமான பாசம். பல வருட காலத்துக்கு பிறகு இன்று அதே போன்றதொரு நிறைவும், அமைதியும் அவருக்குள்ளே!!!

‘யாரிவன்??? அவன் முகத்தையே கண்களால் பருகியபடியே மறுபடி உறங்கிப்போனார் தாமோதரன்.

கிட்டத்தட்ட கால் மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் விவேக். அப்பா தனது மடியில் இருக்கிறார் என்ற உணர்வுடனே அவர் முகத்தையே  பார்த்திருந்தான் நம் விமானி.

அப்போது உள்ளே வந்தார் அவரது மருத்துவர். அவருடனே இரண்டு நர்ஸ்கள்

‘குட் நூன் சார்.’ அவர் சொல்ல கொஞ்சம் தெளிந்தான் விவேக். தாமோதரனை மடியில் வைத்துக்கொண்டு கண்களில் கண்ணீருடன் அவன் அமர்ந்திருந்த கோலத்தை ஊடுறுவிக்கொண்டே கேட்டார் டாக்டர்.

‘இவர் உங்களுக்கு ரொம்ப வேண்டியவரா???’

‘ஆங்... அது வந்து...வார்த்தைகள் தடுமாறின விவேக்குக்கு. ‘இவர் என் அப்பா...’

‘சார்??? என்றார் மருத்துவர் கொஞ்சம் குழப்பத்துடன் ‘உங்க அப்பா நம்ம டாக்டர்தானே சார்... உங்க அப்பா நம்ம கூட இருக்க நமக்கு கொடுத்துவைக்கலையே. இவர் பெயர் தாமோதரன்னு சொன்னார்.’

‘தாமோதரன்!!!’ வாய்விட்டு சொன்னவனின் மனம் தெளிந்து அறிவு மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. மடியில் படுத்திருந்த தாமோதரனை மெல்ல நகர்த்தி தலையணையில் படுக்க வைத்து விட்டு எழுந்தான்,

‘அங்கே போகாம எப்படி நீ தாமோதரனை பாக்குறது???’ கேட்டாரே அந்த மஹாமனிதர். என்னை பெற்றவர். என் ஸ்ரீனிவாசன். இதோ காட்டிவிட்டாரே தாமோதரனை என் கண்ணில்!!! கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டான் விவேக்.

‘என் அப்பா தன்னையே எனக்கு திரும்ப தந்து விட்டார்!!! ‘’ கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள் சொன்னான் விவேக். அப்பா தேங்க் யூ பா...

என்னாச்சு சார்..’ டாக்டர் குழப்பம் நீங்காமல் கேட்க

‘ஆக்ச்சுவலி ஹீ லுக்ஸ் வெரி மச் லைக் மை ஃபாதர். அதனாலே நான் கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டேன்.’

‘ஓ!!! அப்படியா??? டாக்டருக்கே கொஞ்சம் வியப்புத்தான். தாமோதரன் முகத்தை கொஞ்சம் அருகில் சென்று பார்த்தவர்

‘ஆமாம் அப்படித்தான் தோணுது. இவர் எந்த வகையிலாவது உங்களுக்கு சொந்தமா..’ என்றார்

‘இல்லை டாக்டர். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்லை. இது எப்படின்னு எனக்கு புரியலை. பட் ஒண்ணு மட்டும் புரியுது ஐ ஹேவ் காட் மை ஃபாதர் பேக். என்னாலே இப்போ என்  அப்பாவை, அப்பா முகத்தை கண்ணாலே பார்க்க முடியும். இல்லையா???” என்றவன் தாமோதரனின் அருகில் நின்று ஒரு நிமிடம் முழுவதுமாக அவர் முகத்தை ஆசை தீர பார்த்திருந்தான்.

டாக்டரும் நர்ஸ்களும் அவனையே பார்த்திருந்தனர்.

சட்டென நிமிர்ந்து ‘இவர் எப்போ கண் முழிப்பார் டாக்டர் நான் அவர்கிட்டே பேசணும்...’ எனக்கு அப்பாகிட்டே போகணும் என ஏங்கி கேட்கும் மழலையாய் அவன் கேட்க புன்னகைத்தார் மருத்துவர்.

‘மே பீ நைட்குள்ளே, இல்லைனா நாளை காலைக்குள்ளே பேச ஆரம்பிச்சிடுவார்..’ சின்ன சின்ன ஃப்ராக்சரஸ் தவிர பெரிய காம்ப்ளிகேஷன்ஸ் எதுவும் இல்லை. ஹீ வில் பீ ஃபைன் சூன்’

ஓ!!! தட்’ஸ் கிரேட். தேங்க் யூ டாக்டர்.’ என்றவன் அந்த நர்ஸ்களை பார்த்து சொன்னான் ‘இந்த ஹாஸ்பிடல் பூராவும் எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் டிஸ்ட்ரிபியூட் பண்ணுங்க.

அவர்கள் இருவரும் இவனை வியப்புடன் பார்க்க

‘ஐ யாம் வெரி வெரி ஹேப்பி டுடே!!! .‘ஐ ஹேவ் காட் மை ஃபாதர் பேக்...’ உற்சாகமாய் கூவினான் விவேக் ஸ்ரீனிவாசன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.