(Reading time: 19 - 37 minutes)

‘வர மாட்டாள். அவள் வர மாட்டாள்’ நான் இறந்தே போனாலும் அவள் வர மாட்டாள்’ அவர் மனம் துவண்டு போனது.

‘என் வலிக்கு ஆறுதல் கூட சொல்ல வேண்டாம். வலிக்கும் போது அருகிருக்க, அப்பாவென அழைக்ககூட யாருமில்லை’ வலியும் வேதைனையும் அழுத்த திரும்பியவரின் பார்வையில். அருகில் இருந்த நாற்காலியில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த விவேக் விழுந்தான்  

‘யாரிவன்??? என்ற யோசனையுடனே அவர் சற்றே அசைந்து எழ முயன்றதுதான் தாமதம் சட்டென உறக்கம் கலைந்து அவரிடம் ஓடி வந்தான் விவேக்.

‘அப்பா...’ என்றான் கரையும் குரலில். அவர் அவனை புரியாத பார்வை பார்க்க

‘அப்பா எப்போ எழுந்தீங்க நீங்க. நான் தூங்கிட்டேன்.’  என்றான் அவசரமாய். அவர் அருகில் அமர்ந்தவனின் பார்வை அவரை பரபரவென ஆராய அவர் கன்னம் வருடினான் மெல்ல

‘எப்படி இருக்கீங்க??? ரொம்ப வலிக்குதா உங்களுக்கு???’ கேட்டவனின் கண்களில் பளபளத்த நீர் தாமோதரனை என்னவோ செய்ய

யாரு...டா க...ண்....ணா நீ??? மெலிதான குரலில் கேட்டார் தாமோதரன்..

எப்படி வந்ததோ அவர் வாயில் தன்னாலே வந்தது அந்த ‘கண்ணா’. விவேக்கின்  அப்பா அவனை அடிக்கடி அழைக்கும் தொனி!!! மகிழ்ச்சி கடலில் மொத்தமாக மூழ்கிப்போனான் விவேக்.

‘அப்பா’ என்றான் உற்சாகமாய்’

‘நீ யாருன்னு முதல்லே சொல்லுப்பா..’ தாமோதரன் சொல்ல

‘உங்க பையன்’ என்றான் நெகிழ்ச்சியாய்.

தே நேரத்தில் அங்கே குழப்பத்தின் உச்சியில் அமர்ந்திருந்தாள் ஹரிணி.

‘எங்கேதான் போய்விட்டார் அப்பா??? இரவு முழுவதும் தெரிந்தவர்களை, உறவுக்காரர்களை என அனைவரையும் கேட்டாகி விட்டது. யாருக்குமே தெரியவில்லை. இன்று மதியம் மறுபடியும் அவள் வேலைக்கு சென்றாக வேண்டும்!!! இப்போது என்ன செய்ய??? போலிசுக்கு செல்வதா வேண்டாமா???

யோசித்தபடியே அப்பாவின் புகைப்படம் ஒன்றை தேடி எடுத்தாள் அவள்.

தே நேரத்தில் இங்கே மருத்துவமனையில் ஐந்தாவது முறையாக விவேக்கிடம் கேட்டார் தாமோதரன்

‘என்...னா...லே ச...ரி...யா பே... ச... முடியலைபா மூ...ச்சு வாங்குது சொல்லேன் நீ யாருன்னு’

‘உங்க பையன்.பா  எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில்தான் .’ சொல்லிய படியே அவரது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான் விவேக். அவரை ஆசை தீர பார்த்து முடித்ததால் எழுந்த புன்னகை அவன் இதழ்களில்.  

‘என் பேர் விவேக். விவேக் ஸ்ரீனிவாசன். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்கபா .’ என்றான் கையை விடுவிக்காமல்.

‘விவேக் ஸ்ரீனிவாசன்..’ மனதிற்குள் சொல்லிக்கொண்டார் அவர். எங்கோ கேட்டது போல் கூட இருந்தது. அவனை ரொம்பவுமே பிடித்திருந்தது அவருக்கு. அவன் , அவன் பெயர்  அவன் பேச்சு, அன்பான இதமான புன்னகை எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மூச்சுக்கு மூன்று தடவை சொல்லும் அந்த அப்பா!!!

ஹரிணி கூட அவரை அப்பா என அழைப்பது மிக குறைந்த சந்தரப்பங்களிலேயே. கைப்பேசியில் அழைத்தால் கூட ‘சொல்லுங்க. என்ன வேணும்???’ என்பாள் பட்டென. முகத்தில் அடித்தார் போல் இருக்கும் அப்பாவுக்கு.

‘அப்பா!!!’ இந்த வார்த்தைக்காக அவர் ஏங்கி இருக்கிறார் என இப்போதுதான் புரிகிறது அவருக்கு. விவேக்கையே பார்த்திருந்தார் அவர்.

‘அப்பா..’  என்றான் மறுபடியும். ‘உங்க சொந்தக்காரங்க எல்லாரும் எங்கே இருக்காங்க???’. ‘அவங்களுக்கு நீங்க இங்கே இருக்கறதை சொல்லணும் இல்ல’

‘நீ மட்டும் உன்னை பற்றி எதுவும் எதுவும் சொல்ல மட்டாயாம். நான் மட்டும் சொல்ல வேண்டுமோ???’ என்பதை போல் அவர் பார்க்க

இவன் மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறானேன்னு பார்க்கறீங்களா??? அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீங்க இப்போ உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க’

...............................................

‘அப்பா...’ சொல்லுங்கப்பா... மறுபடியும் அவன் அவர் கன்னம் வருட இப்போது இவர் கண்களில் ஏனோ கண்ணீர். ஹரிணியின் எண்ணை கொடுக்க ஏனோ தோன்றவில்லை.

‘எனக்குன்னு யாரும் இல்லைப்பா..’ என்றார் கசப்பு கலந்த குரலில்.

‘அய்யோ..’ அவசரமாக அவர் கண்ணீர் துடைத்தான் விவேக்.. உங்களுக்குதான் ஆறடிலே பையன் நான் இருக்கேனே அப்புறம் என்னபா???’ கவலையை விடுங்க என்றான் மிக இதமாய் ‘எங்கப்பா கண்ணிலே தண்ணி எல்லாம் வரக்கூடாது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். சரியா???

அவர் தலை தன்னாலே அசைந்தது.

‘இப்போ எங்கப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாராம். உங்களுக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம்னு நான் டாக்டரை கேட்கறேன்’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.