(Reading time: 19 - 37 minutes)

ஹரிணி எப்போதும் ரஞ்சனியை எதற்குமே வற்புறுத்தியதில்லை.

ஹர்ஷா அங்கு சேர்ந்து இரண்டு மாதம் சென்ற நிலையில் இந்த கேம்ப் பற்றி அறிந்தான். அதுவும் ஹரிணி மூலம்.

“பிரின்ஸ், ஹரிணி உன் க்ளாஸ்மேட் தானே. அவளை ஈவனிங் சர்ஜிகல் ப்ளாக் வர சொல்றியா. நாளைக்கு கேம்ப் பத்தி டிஸ்கஸ் செய்யணும்” அந்த கேம்ப் ஒருங்கிணைக்கும் ஓர் சீனியர் மாணவன் சொல்ல ஹர்ஷா என்ன கேம்ப் என்று கேட்டறிந்தான்.

ஹரிணியிடம் அவன் தகவல் சொன்னதும் அல்லாமல் அவளோடு கூடவே அவனும் சென்று கேம்ப் பற்றி விவரங்களை தெரிந்து கொண்டான்.

“இவன் எதுக்கு நம்ம கூடவே திரியறான்” ஹரிணி மனதில் நினைத்தாலும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அடுத்த நாள் கல்லூரி பஸ்ஸில் ஹர்ஷாவும் உடன் வர உண்மையில் ஆச்சரியம் அடைந்தாள் ஹரிணி. அந்த நிமிட நேர ஆச்சரிய மின்னல் ஹர்ஷவர்தன் முகத்தில் ஓர் கர்வத்தைத் தோற்றுவித்தது.

ஆனால் அடுத்த மாதம் ஹர்ஷா செல்வதை அறிந்து ரஞ்சனி, ரேவதி உட்பட அவர்கள் வகுப்பு மாணவிகள் பலரும் கேம்ப் வர விருப்பம் தெரிவித்து கேம்ப்பில் ஹர்ஷாவை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஹரிணி மிகுந்த கடுப்பானாள். பெரிய கண்ணன் இவரு. இவங்க எல்லாம் கோபிகைகள். பொரிந்தாள் ஹரிணி.

அது வரை ஹர்ஷாவிற்கு ரஞ்சனியை தெரிந்திருக்கவில்லை. அன்று கேம்ப்பில் மனோரஞ்சனி என்று அவள் தன்னை அறிமுகம் செய்து கொள்ளவும் “ஹாய் மானு” என அவன் அவள் பெயரை சுருக்கிக் கூப்பிடவும் ஆகாயத்தில் மிதந்தாள்.

“என்னை இதுவரை யாருமே மானுன்னு கூப்பிட்டதே இல்லை” விடுதி அறைக்கு வந்த பின்பும் ரஞ்சனி மிதந்து கொண்டு இருந்தாள்.

சிறுவயதில் இருந்தே இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்ததாலும் வெளியுலகத்தை அதிகம் அறிந்திருந்ததாலும் ஹரிணிக்கு சாதரணமாக தெரிந்த கைகுலுக்கல் சற்றே கட்டுபாடுகளுடன் வளர்ந்த ரஞ்சனிக்கு கற்பனைகளைத் தோற்றுவித்தது.

“ரஞ்சு..இட் வாஸ் கேஷுவல்” ஹரிணி தோழிக்கு எடுத்து சொல்லவும் ஓரளவு ரஞ்சனியும் புரிந்து கொண்டாள்.

ஆனால் தூபம் போடவே ஒரு கும்பல் அங்கு இருந்ததே. இந்த சிறு நிகழ்ச்சி பின்னாளில் மிகப் பெரிய பிளவுகளை ஏற்படுத்த போகிறது என்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை தான்.

“இவனை யாரு அவள்களோடு கைகுலுக்க சொன்னது” அதற்கும் ஹர்ஷாவையே பழி சொன்னாள்.

அவள் அவனை ப்ளர்ட் என்று சொன்னதும் அவன் எதிர்வாதம் ஏதும் புரியவில்லை. டிசக்ஷனை தான் செய்யப் போவதாக சொன்னான்.

அன்று அவனுடைய முறை. அவனுக்கு புத்தகத்தில் இருந்து படித்து கைட் செய்வது ஹரிணியின் முறை.

ஹரிணி  கிரேஸ் அனாடமி புத்தகத்தில் இருந்து படித்து சொல்ல சொல்ல  இதயத்தை மிகவும் நுணுக்கமாய் டிசக்ட் செய்தான் ஹர்ஷா. அதை பார்த்த ஹரிணிக்கு ஏதோ ஓர் அருமையான புத்தகத்தைப் படிப்பது போல, ஓர் இனிய இசையை கேட்பது போல ஓர் உணர்வு. அவன் அவ்வளவு தீர்க்கமாய் கவனமாய் நளினமாய் அதே சமயம் கச்சிதமாய் செய்து கொண்டிருந்தான்.

“ஆர் யூ கோயிங் டு பி அ கார்டியாக் சர்ஜன்” எது அவளை செலுத்தியது. எந்த ஷக்தி வருங்காலத்தை அவள் நாவில் குடிவைத்தது. அவள் அறியாள்.

சட்டென அவள் கேட்டுவிட குனிந்திருந்த தலையை நிமிர்த்தினான். அவள் விழிகளில் தன் பார்வையை செலுத்தியவன் அந்த கணத்தில் சொல்லியிருந்தான்.

“எஸ்”

அவனுக்குமே தெரிந்திருக்கவில்லை அவன் “எஸ்” சொல்லி முடித்ததும் தான் அவன் செவிகளில் அந்த ஒலி சென்றடைந்ததும் தான் உணர்ந்தான் தான் கூறியதை.

உடனேயே பார்வையை அகற்றிக் கொண்டாள் ஹரிணி. தான் ஏன் இப்படி கேட்டு வைத்தோம் என்று தெரியாமல் தன்னை தானே கடிந்தும் கொண்டாள்.

“கார்டியாக் சர்ஜன் இஸ் நாட் சோ ஈசி” அவள் சொல்லவும் அலட்சியமாக தோளைக் குலுக்கினான்.

“வி வில் சி இட்” அவன் “வி” என்று சொன்னது இருவர் கவனத்திலும் அப்போது பதியவில்லை.

முதாலம் ஆண்டு உற்சாக கேளிக்கைகளுக்கும் குறைவில்லாமல் சென்றது. வகுப்பு மொத்தமும் டூர் போவதாகட்டும் இல்லை கிளாஸ் கட் செய்து சினிமா போவதாகட்டும் ஹரிணி லாவகமாக கழண்டு கொள்வாள்.

ஹர்ஷா அதை கவனித்தாலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அன்று காலேஜ் டே. கல்லூரியே விழாக் கோலம் பூண்டிருந்தது. மாலை கலை நிகழ்ச்சிகள் களை கட்டின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.