(Reading time: 19 - 37 minutes)

எல்லோருக்கும் ஒரு ஊசி சிரஞ்ச் கொடுக்கப்பட்டது.

அவரவர் டேபிள் மேட்ஸ்ஸின் ரத்தத்தை சிரஞ்ச் மூலம் உறிஞ்சி அதை பரிசோதனை செய்ய வேண்டும். எப்படி ரத்த நாளத்தை கண்டறிந்து அதை செய்ய வேண்டும் என்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஹர்ஷாவை அமர வைத்து அவனது புஜத்தில் ஸ்ட்ராப் கட்டி அவனது கையில் இருந்த ரத்த நாளத்தில் இருந்து சிரஞ்ச் மூலம் நிமிட நேரத்தில் குருதியை உறிஞ்சி அதை பரிசோதனை செய்து பேராசிரியரிடம் காண்பித்தாள் ஹரிணி.

“பி பாசிடிவ் சர்” அவள் சொல்லவும் ஹர்ஷாவும் எட்டிப் பார்த்தான்.

“வெரி குட். ஹர்ஷா நவ் யூ செக் ஹர்ஸ்” சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

அவன் என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்னரே ஹரிணி அந்த சோதனையை செய்து முடித்திருந்தாள்.

மெடிகல் கேம்ப்பில் ப்ளட் டெஸ்ட் எடுக்க பயின்று இருந்தாள் ஹரிணி. அது அவளுக்கு வெகுவாய் கைகொடுத்தது. ஹர்ஷாவிற்கு வலி ஏதும் தெரிய கூட இல்லை.

இப்போது ஹரிணி ஸ்டூலில் அமர்ந்து கொண்டு இடது  கையை அவன் புறம் நீட்டினாள். அப்போது அவர்கள் அருகே ஹேமமாலினி ஹேமந்த்தை இழுத்துக் கொண்டு வந்தாள்.

“ஹரிணி இவன் என்னை இரண்டு முறை ப்ரிக் செய்துட்டான். ப்ளீஸ் ஹெல்ப்” ஹேமந்த்தை குறை சொல்லியபடியே ஹரிணிக்கு அடுத்து இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.

ஹரிணி அவள் கையில் ஸ்ட்ராப் கட்டி ரத்த நாளத்தைத் தேட அது தெரிவேனா என்று போக்கு காட்டியது.

“ஹேமா ஐ கான்ட் பைன்ட் இட் டூ. லெக்சரரை கூப்பிடுவோமா” ஹரிணி கேட்க “லெட் மீ ட்ரை” என்று முன் வந்தான் ஹர்ஷா.

“பிரின்ஸ் வலிக்காம செய்” பத்திரம் காட்ட “மாலு வில் ஐ எவர் ஹர்ட் யூ டியர்” என்று சிரித்தபடியே அவளது கரத்தில் (வெயின் VEIN )ரத்த நாளத்தைத் தேடினான்.

“இவனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது. கேம்ப்பில் ஒரு முறை கூட இதையெல்லாம் செய்ததில்லை இவன்” என்று ஹரிணி மனதில் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் லாவகமாக ஊசியை செலுத்தி வெற்றிகரமாக ப்ளட் டிரா செய்திருந்தான்.  

“வாவ் பிரின்ஸ் யு ஆர் தி பெஸ்ட்” ஹேமா உற்சாகமாகி விட ஹேமந்த் முகத்தைத் தொங்க வைத்துக் கொள்ள ஹர்ஷா அவனை தட்டிக் கொடுத்தான்.

அவர்கள் தாங்க்ஸ் சொல்லி அவர்கள் டேபிளுக்கு சென்றபின் ஹரிணி தனது கையை நீட்டினாள்.

ஹர்ஷா அவளது புஜத்தில் ஸ்ட்ராப் கட்ட ஹரிணியின் ரத்த நாளங்கள் புடைத்தன.

“என்ன தான் இருந்தாலும் இவன் ஸ்கில்ஸ் ஆர் டூ குட்” மனதிற்குள்ளேயே பாராட்டை வாசித்தாள் ஹரிணி. ஆனால் சிறிது நேரத்திலேயே அவள் எண்ணம் பொய்யாகியதோ என்று எண்ணும் படி சிரஞ்சை கையில் எடுத்து ஊசியை அவள் கையில் செலுத்த முயன்ற ஹர்ஷாவின் கரங்கள் வெகுவாய் நடுங்கன.

ஒன்றும் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஹரிணி..

“ஹர்ஷவர்தன் எல்லோரும் முடிக்க போறாங்க. சீக்கிரம் ப்ளட் டிரா செய்” அவள் அவனை மிரட்டும் தொனியில் கூற நடுக்கத்துடனே அவள் ரத்த நாளங்களில் ஊசியை செலுத்தினான்.

செலுத்தியவன் கண்களை இறுக மூடவும் செய்தான்.

“என்னாச்சு” அவள் அவனைப் பார்த்து கேட்டாள். அவன் முகத்தில் நிஜமாக ஓர் பதட்டம் இருந்தது.

இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன் தானே ஹேமாவிற்கு ப்ளட் டிரா செய்தான். ஒழுங்கா தானே இருந்தான் இப்போ என்னாச்சு இவனுக்கு. ஒரு வேளை என் கையை தொட கூட யாவனுக்கு அருவெறுப்பா இருக்குதோ.

அவள் பலவாறு சிந்தனை செய்து கொண்டிருக்க ஒரு வழியாக இரத்தைத்தை எடுத்திருந்தான் அவன்.

பஞ்சு கொண்டு ஊசி குத்திய இடத்தில் அழுத்தி “வலிச்சுதா” என்று கேட்கவும் செய்தான்.

விழி அகல அவனை அதிசயமாய் பார்த்தாள் ஹரிணி. அவன் கண்களில் இன்னும் ஒரு வித பாவம் தெரிந்தது. அது என்ன என்று ஹரிணியால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

ஏன் ஹர்ஷாவிற்கும் புரியத்தான் இல்லை. சற்று முன் ஹேமமாலினிக்கு லாவகமாய் ரத்த பரிசோதனை செய்தவன் ஹரிணியின் கையில் ஊசியை செலுத்த ஏன் நடுக்கம் கொண்டான். அவளுக்கு வலித்து விடுமோ என்று பயந்தான். தான் அந்த வலியை தருகிறோம் என்ற எண்ணத்தில் வந்த பயமும் நடுக்கமுமா. காலம் அவர்களுக்கு இந்த உணர்வின் விடையை ஒரு நாள் கண்டிப்பாக தந்துவிடும்.

அவன் அவளது ப்ளட் க்ரூப் கண்டுபிடித்து சொல்லவும் “வாட் நான்சன்ஸ்” என்று கூறியபடியே மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தாள்.

மீண்டும் மீண்டும் நம்ப மாட்டாமல் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.