(Reading time: 19 - 37 minutes)

பேராசிரியர் வந்து ஹர்ஷா கண்டுபிடித்ததை உறுதி செய்து அகன்று விட சற்றே தள்ளாடினாள்.

தடுமாறியவளை ஸ்டூலில் அமர செய்தான் அவன். ஒரே ஓர் நொடி அவன் கரங்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவள் கண்களில் திகைப்பு அப்பட்டமாய் தெரிந்தது. அவளை அறியாமலேயே கண்ணீர் அருவியாய் வழிந்தது.

ஏன் அழுகிறாள் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவள் கண்ணீர் அவன் இதயத்தில் வலியாய் இறங்கியது.

“ஹரிணி என்னாச்சு” அவன் உலுக்கவும் சட்டென அவன் கரத்தை விடுத்தவள் அவசரமாய்  கண்களை துடித்துக் கொண்டாள்.

“ஒண்ணுமில்லை” என்று தலையாட்டியவள் தனக்குத் தானே “இது உண்மையில்லை. இது ஏதோ தப்பா காட்டுது” என்று சொல்லிக் கொண்டது அவனுக்கு நன்றாக கேட்டது.

வகுப்பு முடிந்ததும் அவள் அவசர அவசரமாக ஓடினாள். அதற்கு பிறகு இருபது நாட்கள் கழித்து தேர்வு ஹாலில் தான் அவளை அவன் பார்த்தான். முன் எப்போதும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தாள்.

முதலாம் ஆண்டு பரீட்சை முடிவுகள் வெளிவர அடுத்த ஆண்டில் கால் பதித்தனர்.

இப்போது நேரடியாக ஹாஸ்பிடல் சென்று நோயாளிகளை  பரிசோதனை செய்ய தயாராகினர். வெள்ளை கோட் அணிந்து கழுத்தில் ஸ்டேதஸ்கோப் மாட்டிக் கொண்டு ஒரு வித பெருமை தலை தூக்க அந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிளினிகல் ரவுண்ட்ஸ் சென்றனர்.

அன்று சர்ஜிகல் ரவுண்ட்ஸ் முடிந்து வெளிவருகையில் மாடிப்படியில் அவள் கரத்தை அழுந்தப் பற்றினான்.

“ஏய் என்ன செய்யுற” அவள் விடுவிக்க முயன்றாள்.

“டெல் மீ அன்னிக்கு ப்ராக்டிகல் போது ஏன் அழுத” அவன் நியாபகம் வைத்துக் கேட்க சட்டென அவள் விழிகள் குளமாகின.

அவளுக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் போயும் போயும் இவனிடமா என்று இருந்தது.

“ஒண்ணுமில்லை லீவ் மீ. இனிமே இப்படி செய்தா உன் மேல கம்ப்ளைன்ட் செய்திருவேன்” அவள் அவன் மீது பாய மிகுந்த கோபத்திற்கு உள்ளானான் ஹர்ஷா.

அனுசரணையாக அவன் கேட்க முயல அவள் கூறியதை கேட்டவன் சட்டென அவள் கையை உதறி திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

“திமிரு. இப்படி திமிரு பிடிச்சவளை நான் பார்த்ததே இல்லை” அவன் உரக்க சொன்னது அவள் செவிகளில் எட்டியது.

“அன்று நீ கண்டுபிடித்து சொன்ன போது என் தலையில் இறங்கிய இடிக்குப் பின்னும் என்ன திமிர் மிஞ்சி இருக்கப் போகுது” விரக்தியாய் வறண்ட சிரிப்பை உதிர்த்தாள்.

முடிவிலியை நோக்கி ...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.