"நான் எதற்கு வரட்டுத் தவளை மாதிரி கத்த வேண்டும்? அததன் தலையெழுத்துப்படி நடக்கிறது! கோபு அகத்தில் அப்பளம் இடக் கூப்பிட்டார்கள் என்னை போய்விட்டு வருகிறேன் காமு" என்று கூறிவிட்டு, விசாலாட்சியும் கிளம்பி விட்டாள்.
தனியாக விடப்பட்ட காமுவின் மனம் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி தத்தளித்தது.
"என்னுடைய சம்மதம் ஒன்றுதானே கேட்டார் அவர்? வேறு சீர் சிறப்புகளைப் பற்றி லட்சியம் செய்பவராகவே காணோமே?" என்று பல விதமாக நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமு. மணி ஜோஸ்யர் அடிக்கடி தன் தந்தையிடம் 'அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி' என்று கூறி வருவதை நினைத்துப் பார்த்தது அவள் மனம். அந்த அதிர்ஷ்டம் இதுதானோ என்றும் நினைத்தாள் காமு.
எந்த நிமிஷத்தில் யாரைத்தேடி ஸ்ரீ மகாலட்சுமியின் 9 டாட்சம் ஏற்படுகிறது என்பது யாராலும் அறிய முடியாத ஷயம் அல்லவா? காமுவின் அதிர்ஷ்டத்தால் அவளும், அவள் குடும்பமும் உயர வேண்டும் என்று இருந்தால் அப்படி நடந்தே தீரும். கடவுளின் கருணை இருந்தால் எது வேண்டு மானாலும் நடக்க முடியும் என்று அவள் தந்தை தீர்மானித்து இருந்தபடியே காமுவும் தீர்மானித்துக் கொண்டாள்.
----
மீனாட்சி அம்மாளும், ருக்மிணியும் பெண் பார்த்து விட்டு வந்த பத்து தினங்களுக்கு அப்புறம் ஒரு தினம் திடீரென்று பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பானுவுக்கு லேசாக ஜுரமும், இருமலும் ஆரம்பித்தன. சம்பகம் முதலில் அதை அவ்வளவாகப் பாராட்டாமல் கஷாயம் வைத்துக் குழந்தைக்குக் கொடுத்தாள்.
அந்த வீட்டில் எடுத்ததற்கெல்லாம் ஓயாமல் ருக்மிணியும், அவள் குழந்தைகளும் மருந்து சாப்பிடுவார்கள். பொழுது விடிந்தால் அரை ‘பாக்கெட்' பிஸ்கோத்துகளைக் கொடுத்துவிட்டுக் குழந்தை சரிவரச் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் இழுத்துக்கொண்டு ஓடுவாள் ருக்மிணி அவர் தன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டே ஏதாவது மருந்தைக் கொடுத்து அனுப்புவார். ஓயாமல் பசியால் வாடும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு ஒரு பிடி