(Reading time: 19 - 38 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

அன்னம் கொடுக்க மறுக்கும் உள்ளம், வெள்ளித் தட்டில் தயிர் விட்டுப் பிசைந்த சாதத்தைக் கூசாமல் நாய்க்குப் போடத் தயங்குவதில்லை.

   

பானுவுக்கு உடம்புக்கு வந்தால் முதலில் அதைப்பற்றி அவள் தாத்தா சர்மாவிடம் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மீனாட்சி அம்மாளின் தடை உத்தரவு! 'தண்டத்திற்குப் பணம் செலவழித்துப் பிள்ளையின் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கக் குழந்தையின் தகப்பன் ஒன்றும் சம்பாதித்துப் புரட்டவில்லை' என்பது அவள் தீர்மானம். சுக்கும், மிளகும்தான் பானுவின் ஔஷதங்கள்.

   

அந்த வீட்டிலேயே பானுவிடம் அன்புடன் இருப்பவர் சர்மா ஒருவர்தான். ஆகவே, அவருடைய அன்பையும் அந்தக் குழந்தை அடைவதில் மீனாட்சி அம்மாளுக்கு விருப்ப மில்லை.

   

குழந்தைக்குக் கஷாயம் கொடுத்துப் போர்த்திப் படுக்க வைத்து விட்டுத் தன் அலுவலைக் கவனிக்க ஆரம்பித்தாள் சம்பகம். சங்கரன் காரியாலயத்திலிருந்து வந்ததும் பானுவிடம் சிறிது நேரம் பேசுவான். அவன் அவ்விதம் குழந்தையிடம் சலுகை காட்டுவதும் மீனாட்சிக்குப் பிடிக்க வில்லை.

   

"ஆமாம், அது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு போவாள் அவள்.

   

அன்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் விருப்பத்தை அறிந்து கொண்டு போக வந்திருந்தார். சங்கரன் ஊரி லிருந்து வந்தது முதற்கொண்டு அவன் மனம் குழம்பிக் கிடந்தது. காமுவின் அழகிய வதனம் அடிக்கடி தோன்றி அவனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது குழம்பிய மனத்துடன் சங்கரன் தோட்டத்தில் உலாவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

   

தகப்பனாரிடம் தான் ஊரிலிருந்து வந்ததும் காமுவைப் பற்றிப் பிரஸ்தாபித்தது அவன் நினைவுக்கு வந்தது.

   

"எனக்கு நீ யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண் டாலும் ஒன்றுதான் அப்பா. பணம் பணம் என்று பறக்கிறவள் உன் அம்மாதான். அவளுடைய அபிப்பிராயத் தில் பணம் ஒன்றுக்குத்தான் மதிப்பு இருக்கிறதே ஒழிய வேறு விஷயங்களுக்கு மதிப்பே இல்லை! பதினைந்தாயிரம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.