தான் அன்று கூட்டத்தில் பாட்டு கேட்டபோதே தனக்கும் அம்மாதிரியாக பாடக்கூடிய சமயம் வருமா என்று ஏங்கிக்கொண்டிருந்தானாகையினால் அவன் உடனே முழுமனத்தோடு சம்மதித்தான். வேலை செய்துகொண்டிருந்த வீட்டில் உத்தரவு பெற்றுக் கொண்டு அவரோடு சென்றுவிட்டான். கேசவனுக்கு வயது 12 தான் ஆகிறதென்றாலும் பார்வைக்கு நன்றாகவும், வசீகரமாகவும் இருப்பான். ஆகையினால் அவனுக்கு கிருஷ்ணன் வேஷங்கொடுத்து நடிக்கச்செய்தால் மிக்க பொருத்தமாயும், அழகாயுமிருக்கும் என்று நினைத்து கிருஷ்ணலீலையே முதலில் நடத்தத் தீர்மானித்து அன்று முதல் கேசவனுக்கு வீட்டிலேயே இருக்க இடங் கொடுத்து விட்டார்.
கேசவன் இந்த இடத்தில் வந்துசேர்ந்த பிறகு விளையாட்டுப் புத்தியுடைய சிறு பையனாதலால் தன் விசனத்தையே மறந்து வெகு சந்தோஷத்தையடைந்தான்; எனினும் தன் தாயார், தங்கைகளைப்பற்றி நினைக்காத நாள் இல்லை. அவர் தான் சொல்லிக்கொடுக்கும் பாடல்களையும், நடிக்கும் விதங்களையும் நன்றாகக் கற்றுக்கொள்ளச் செய்வதோடு அவனை நன்றாக முன்னுக்குக் கொண்டுவர எண்ணி பள்ளிக்கூடத்திலும் இலவசமாகவே படிக்கச் சிபார்சு செய்தார்.
கேசவன் வெகு ஆநந்தத்துடனும், முழுமனத்துடனும் கிருஷ்ணலீலா நாடகத்தைக் கற்றுக்கொண்டதால் இரண்டுமாத காலத்திற்குள் வெகு நன்றாகப் பாடம்செய்து ஒத்திகையில் முதல் தரமாக நடித்து சபையோரைக் களிப்பித்ததனால் உடனே நாடகத்தைப் பகிரங்கமாக நடிக்க ஏற்பாடு செய்து மாஸ்டர் கேசவன் கிருஷ்ணனாக நடிப்பான் என்று விளம்பரங்கள் செய்துவிட்டார்கள்.
-----
கிருஷ்ணன் குழலூதுவதுபோல புகைப்படம் பிடித்து அதை நோட்டீஸில்; பிரசுரம் செய்தார்கள். படத்தில் வெகு அழகாக அமைந்துள்ள கிருஷ்ணனைப் பார்த்து எல்லோரும் நாடகத்திற்குத் திரள் திரளாக வந்தார்கள். கொட்டகை நிரம்பி இடமில்லாதபடி ஆய்விட் டது. ஜனத்திரளின் பயனாக ஆயிரமாயிரமாகப் பணம் வசூலாகிவிட் டது. அன்று நடந்த கிருஷ்ணலீலையில், கேசவன் ஆயிரக்-கணக்கான ஜனங்களின் மனத்தை ஒருங்கே கொள்ளையடித்துவிட்டான். அவனைப் பற்றிப் போற்றாதோர் இல்லை. "அடாடா! என்ன அழகாய் நடித்தான்! என்ன இனிமையான