ஏற்பாடு செய்து அந்த நாடகக்காரனிடமும் சொல்லிவிட்டு அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களைப் பிரத்யேகமான இடத்தில் வைத்து, அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்து, அன்றே தனது கம்பெனியில் உள்ளோருக்கு இவர்களைப் பற்றி அறிமுகம் செய்துவைத்தான்.
முதலில் ஸ்ரீ வள்ளி நாடகத்தை நடிக்கச் செய்ய ஏற்பாடு செய்து, வள்ளியின் நடிப்பை பரிமளாவுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். பரிமளா தன்னுடைய நடிப்பையும், பாடல்களையும் வெகு விரைவில் பாடம் செய்யத் துவக்கினாள். கேசவன் சுப்பிரமணியனாகவும், பரிமளா வள்ளியாகவும் நடிக்க ஏற்பாடாகிவிட்டது. பரிமளவல்லி தன் திறமையினால் முதல் முதலிலேயே உயர்ந்த பாத்திரமாகிய வள்ளியம்மையாக நடிக்க இசைந்து சுமார் இரண்டு மாதத்திற்குள்ளாகவே வள்ளி நாடகம் நடிக்கத் தயாராகி விட்டாள். ஒத்திகையில் மிகவும் திருப்திகரமாக பரிமளா நடித்ததால் அபரிமிதமான விளம்பரங்களைக் கம்பெணிக்காரன் செய்து "தேதியை எதிர் பாருங்கள்; எதிர் பாருங்கள் ". என்று பிரசுரித்து விட்டான்! சுவர்கள், விளக்குத் தூண்கள், டிராம் வண்டிகள் முதலிய இடங்களில் பெரிய எழுத்துக்களில் "நீங்கள் இதுவரையில் கேட்டிராத, பார்த்திராத அற்புத நாடக ரத்தினத்தின் இனிமையான கானத்தைக் கேட்கத் தவறாதீர்கள். பரிமளம் மிகுந்த பரிமளா ஸ்ரீ வள்ளியாயும், நாடக உலகத்தில் நற்கீர்த்தி வாய்ந்த மாஸ்டர் கேசவன் சுப்பிரமணிய வேடனாயும் நடிக்கப் போகும் தேதியை எதிர் பாருங்கள்.எதிர்பாருங்கள் " என்று தடபுடலாய் முதலில் போட்டுப் பிறகு நாடகத் தேதியைக் குறித்து விளம்பரம் செய்தான்.
------
நாடகத்தன்று ஏராளமான கூட்டம் கூடி விட்டதால் கொட்டகையில் நிற்கவும் இடமின்றி, டிக்கட்டுக்களை வாபீஸ் செய்யும்படி யாகவும் ஆய்விட்டது. நாடகம் ஆரம்பித்தாயிற்று. பரிமளா வள்ளி யாகத் தோன்றும் பொழுது தேவகானமோ, கந்தர்வகானமோ' என்று ஐயுறும் படியாகப் பாடிக்கொண்டே பிரஸன்னமானாள்.
கேவலம் பத்து வயதுப் பெண் குழந்தை என்பதை அப்போதே பார்த்த சபையோர்கள் அவளுடைய அற்புதமான சாரீரத் தின் இனிப்பையும், அழகின் மேம்பாட்டையும், பாடும் திறமையையும் கண்டு வியப்புற்று ஆநந்த சாகரத்தில் மூழ்கி அடிக்கடி கர கோஷம் செய்து ஒன்ஸ் மோர் (once more) என்று கத்தினார்கள். வள்ளி ஆலோலம் என்று பாடுகையில் உண்மையில் கொட்டகையில்