நிசப்தம் குடிகொண்டு விட்டது. பிறகு வள்ளிக்கும் சுப்பிரமணியனுக்கும் நடந்த தர்க்கம் சபையோர்களை பிரமிக்கச் செய்து விட்டது. நாடகம் வெகு ருசிகரமாக நடந்தேறியது. அந்த முதல் நாடகத்திலேயே பரிமளாவின் பெயர் உலகில் பறக்க வாரம்பித்து விட்டது.
சிறிய பெண் இத்தனை சாமார்த்தியமாகப் பாடி நடிப்பதைக் கண்டு மிக்க பூரித்த கனதனவான்கள் அவளுக்கு மெடல்களும், பரிசுகளும் கொடுத்தார்கள். பிறகு சாவித்திரி, சீதாகல்யாணம், கண்ணகி, அல்லி, பவளக் கொடி, பாமா விஜியம், பாரிஜாதம் முதலிய பல நாடகங்களில் பரிமளா பிரக்யாதி அடைந்ததோடு நந்தனார் சரித்திரத்தில் முதல் பரிசு பெற்றாள்.
நாம் இப்பொழுது அந்த நாடகக் கம்பெனியின் நோக்கத்தை முக்கியமாகக் கூறவேண்டியது அவசியமாதலால் அதைப் பற்றிச் சிறிது கூறுவோம். பொன்னுசாமி என்பவன் மிக்க செல்வம் படைத்த வம்சத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர்கள் தங்கள் வம்ச வழக்கத்தை முன்னிட்டுப் பொன்னுசாமிக்கு யுக்த வயதில் ஓர் அழகிய பெண்ணைப் பார்த்து விவாகம் செய்து வைத்தார்கள். பொன்னுசாமிக்குக் கூடிய வரையில் கல்வி கற்று வைத்தார்கள். பொன்னுசாமி பாலியத்தில் செல்வத் திமிரினால் மைனர் ஜமீந்தார் தோரணையில் ஆடம்பரமாக உண்டு களிப்பதும், தினுசு தினுசாக உடை தரிப்பதும், சதா பத்து சினேகிதர்களுடன் குசாலாக உலாவித் திரிவதும் தவறாது சினிமா, ட்ராமா முதலியவற்றிற்குப் போவதும், ஆடம்பரத்துடன் உயர்தர மது வகைகள் குடிப்பதும், வேசி வீட்டுறவு கொள்வனுமான முதலிய லீலைகளைச் சலிக்காது செய்து வந்தான்.
அவனுடைய பெற்றோர்கள் இந்த ஆடம்பா தடபுடலைத் தடுப்பதற்கு எத்தனை சொல்லியும் கேளாது அவன் தத்தாரியாகத் திரியலானான். அவனுடைய பாலிய லீலைகளின் பயனாக பெற்றோரின் செல்வம் சிறுகச் சிறுகக் கரைய வாரம்பித்தது. விவாகமாகிய மனைவி பக்குவமாகி வீட்டிற்கு சம்சாரத்திற்கு வந்து விட்டாள். பெரியோர்களின் நிர்ப்பந்தத்தினால் சோபனக் கல்யாணத்திற்கு ஏற்பாடாயிற்று. பொன்னுசாமி அன்றைய தினமும் வேண்டியபடி குடித்துவிட்டு ஆடிப்பாடிக் கூத்தடித்த பின்னரே சயன அறைக்குச் சென்றான்.
-----
பொன்னுசாமியின் மனைவியான குணவதி என்பவள் இயற்கையான லஜ்ஜையுடன் தலை