சாரீரம்!" என்று புகழ்ந்தவாறு எல்லோரும் வீடு திரும்பினார்கள்.
கேசவனின் கஷ்டகாலம் விமோசனமே ஆய்விட்டது எனலாம். அதே கிருஷ்ண-லீலையை அடுத்தடுத்துப் பத்து முறை நடித்தார்கள். கேசவனுக்கு அந்த நாடகத்திலேயே எண்ணற்ற மெடல்கள் கிடைத்ததுடன் நல்ல கீர்த்தியும் உண்டாகிவிட்டது இத்தனை பெரும் புகழ் தனக்கு வந்துவிட்டதனால் சந்தோஷம் ஒரு புறம் கொண்டான்; எனினும் இவைகளைப் பார்த்துச் சந்தோஷப்பட தன் தாயார் இல்லையே என்ற ஏக்கம் மட்டும் அவனது மனத்தை வாட்டியது. கடவுளைக் குறித்து இது விஷயமாகச் சதா பஜனை செய்து கொண்டே இன்னும் பல நாடகங்களையும் கற்றுக்கொண்டு படிப்பையும் கவனித்து வந்தான். இவ்விதமே பின்னும் சில வருடங்களாயின. கேசவன் மெட்ரிக்குலேஷனையும் பாஸ் செய்தான். அதற்குமேல் காலேஜிலும் சேர்ந்தான். வயது 16 ஆயிற்று. சென்னையில் கேசவனின் பெயரை யறியாத குழந்தைகள் கூட இல்லை.
-----
சென்னைக்குத் தெற்கேயுள்ள கடலூரில் ஓர் பெரிய தனவந்தர் இருந்தார். அவருக்கு செல்வத்திற் கேற்ற சந்தானமும் நிரம்பி இருந்தது. வாய் வாழைப் பழம்; கை கரணைக் கிழங்கு என்பது அவருக்கே தகும். தன்னுடைய மக்களுக்கே வயிறு நிரம்பச் சாப்பாடு போட மாட்டார். அவருக்கு இத்தனை செல்வம் எந்த வகையில் சேர்ந்ததெனில் அவர் ஓர் நாடகக் கம்பெனி வைத்து அதற்குத் தலைவராக விருந்து ஏராளமான பொருள் திரட்டிவிட்டார். அவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் பெண் பார்ப்பதற்கு நல்ல வசீகரமும், அழகுக் கேற்ற கூந்தலுடன் மா நிறமுமாக விருந்தாள். அவளுக்கு சுமார் பத்து வயதிருக்கும். அந்த வீட்டில் அப்பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அந்த நாடகக்காரருக்குத் தெரிந்த வேறொருவரின் சிபார்சின் பேரில் வேலைக்கு வந்தாள். வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதோடு நாடகக் கொட்டகையில் நாடகத் தன்று கூடவே சென்று அங்கு பெருக்குவதும், ஜமக்காளம் போடுவதும், நாடகத்தில் நடித்தபிறகு துணி மணிகளை வாரி மூட்டை கட்டுவதுமான வேலையையும் அப் பெண்ணே செய்யவேண்டும். இத்தனை வேலை செய்யும் பெண்ணுக்கு அவர் மாதம் 5 ரூபாய் சம்பளமும், இரண்டு வேளைச் சாப்பாடும் வெகு தாராளமாகப் போட்டு வந்தார்.
பிரதி நாடகத்திற்கும் அந்தப் பெண் சென்று பெருக்கிவிட்டு அங்கு ஓர் மூலையில் சாமி ஆடிக்கொண்டே உட்கார்ந்திருப்பாள். அந்தப் பெண் தூங்குவதைக் கண்ட முதலாளி வெள்ளென்று