(Reading time: 34 - 68 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

-----

   

வந்தவர்:- அம்மா! உன் விஷயம் கேட்க மனம் மிகவும் வருந்துகின்றது. உன் பெயரென்ன?

   

பெண்மணி:- பெரியவரே! குடிக்கத் தண்ணீர் கொடாத மகராஜிக்கு கங்கா பவானி என்று பெயராம் என்கிற பழமொழிப் படிக்கு ஒருவிதத்திலும் பரிமள மற்ற அனாதையாகிய எனக்கு என் தாயார் பரிமளா என்று பெயர் வைத்து அழைக்கிறாள். என்னுடைய இந்த நிலைமையில் பரிமளா என்று என் பெயரைச் சொல்லி கொள்ள வெட்கமடைந்து என்னைக் கேட்போருக்கும், இந்த வீட்டுக்காரர்களுக்குங் கூட என் பெயரை நான் கூறாது கன்னி என்று கூறி வருகிறேன். தாங்கள் ஏதோ என் பேரில் அனுதாபத்துடன் அழைத்து விசாரித்ததால் நான் எனது நிலைமையைப் பூர்ணமாக உங்களிடம் கூறினேன்" என்று மிகக் கண் கலங்கியவாறு கூறினாள்.

   

இதைக்கேட்ட பொன்னுசாமி உண்மையிலேயே மனமுருகிப் போய் “பரிமளா! நான் உன் தாயாரைப் பார்க்கவேண்டும். அங்கு அழைத்துச் செல்கிறாயா!" என்று கண்ணீர் உதிரக் கேட்டார். அதற்குப் பரிமளா சம்மதித்து அவரை யழைத்துக் கொண்டு வீடு சென்றாள். காச நோயினால் மிக்க மெலிந்து கிடக்கும் பார்வதியம்மாள் வெகு சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்து மரியாதை செய்து "வாருங்கள்; உட்காருங்கள்" என்றாள். பொன்னுசாமியும் உட்கார்ந்து அவளை நோக்கி "அம்மா! உங்கள் வரலாற்றைக் குழந்தையின் மூலமறிந்தேன். உங்கள் மகள் வெகு இனிமையாகப் பாடுவதைக் கேட்டு நான் மிக்க சந்தோஷமடைந்தேன். நான் உங்களுடைய மகளின் சங்கீதத்தைக் கேட்டது முதல் என் மனம் உங்கள் குழந்தையை என் கூடவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுகின்றது. உங்களுடைய சகலமான செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் ஓர் நாடகக் கம்பெனி வைத்திருக்கிறேன். அதில் உங்கள் குழந்தையைக் கொண்டு சேர்க்க என் மனம் இச்சிக்கின்றது. உங்கள் சம்மதத்தை அறிந்து உங்களை அழைத்துச் செல்வதற்கே வந்தேன். உங்கள் சம்மதத்தைத் தெரிவித்தால் அதன்படியே செய்கிறேன்" என்றார்.

   

------

   

ஏற்கெனவே தன் குழந்தை அங்கு கஷ்டப்படுவதை பறிந்து "அந்த கஷ்டத்தினின்றும் விடுதலை பெற்றால் போதும். சிறிய குழந்தையாகிய அவள் கஷ்டப்படாது எவ்விதமாவது பிழைக் கட்டும்" என்று நினைத்து அவள் அதற்கு இசைந்தாள். உடனே தான் அவர்களை அழைத்துச் செல்வதாக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.