(Reading time: 34 - 68 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

குனிந்து நிற்பதைக் கண்டு அவன் கோபித்து "சீ நாட்டுப்புறக் கழுதை! கட்டிலின் கீழே புகுந்து கொள்" என்று கூறிவிட்டு அப்போதே கதவைத் திறந்துகொண்டு தன் ஆசை நாயகியாகிய மோகனாவின் வீட்டை யடைந்தான். இச் செய்கையினால் எல்லோரும் மனம் வருந்தி பொன்னுசாமியைத் திட்டினார்கள். மனைவி என்கிற பாசத்தை அவன் சிறிதும் கொள்ள வில்லை.

   

எந்த நாடகத்திற்குத் தான் சென்ற போதிலும், தாசி மோகனாவுக்கும் முதல் வரிசை சோபாவில் தனிக் கட்டணத்துடன் ரிஸர்வ் செய்து விட்டு, நாடகம் சரியாக ஆரம்பிக்கும் தருணம் இருவரும் வந்து சேருவார்கள். வந்த இடத்தில் உயர்தர சுருட்டுவகைகள், குடிவகைகள் முதலிய செலவிற்கு மட்டும் 5 ரூபாய் செலவிடுவான். இந்த விதத்திலேயே இத்தகைய அநாவசிய செலவு செய்யும் பொன்னுசாமி தன் வைப்பாட்டியின் மற்ற விஷயங்களில் எத்தனை விரயம் செய்திருப்பான் என்பதைக் கவனித்துப் பாருங்கள். நாடகத்தில் யாரேனும் சற்று நன்றாகப் பாடிவிட்டால்—நடித்து விட்டால்- பொன்னுசாமியினுடைய மெடல்தான் அவர்களுக்கு முதலில் கிடைக்கும். அதுவன்றியில் நாடகத்தில் நடிக்கும்போ தெல்லாம் தனக்கு இஷ்டமான நடிகர்களுக்கு 10 ரூபாய் நோட் டுக்கள் தினம் 4-5-க்குக் குறையாமல் விழும். நாடகத்தில் எத்தகைய ஆடம்பரமான உடை தரித்துக் கொள்கிறார்களோ அதைப் பார்த்த மோகனா அதே போலத் தனக்கு உடை வேண்டுமென்று வாங்கிக் கொள்வாள். இதைத் தவிர பெரிய கொள்ளையாகிய குதிரைப் பந்தயத்திற்குத் தன் வைப்பாட்டியுடன் செல்வதும் தாராளமாகப் பணத்தைத் தோற்பதும் குறைவில்லை. இதுவும் தவிர மோகனாவின் ஜாதியில் சற்று தேர்ச்சி பெற்ற நாட்டியக்காரிக்கோ, பாட்டுக் கச்சேரி செய்பவளுக்கோ, கதை செய்பவளுக்கோ முதல் தாம்பூலம் மோகனாவே கொடுத்து தன் வீட்டில் மேற்படியாரை வர வழைத்து மெடல்,சேலை, ரூபா முதலியன இஷ்டமானபடி பரிசு கொடுத்தனுப்புவாள்.

   

-----

   

பொன்னுசாமியின் ஆடம்பரம் முற்ற முற்ற அவன் பெற்றோரின் மன நிலைமை கேவலம் முறிந்து விட்டது. எத்தனையோ பாடு பட்டுத் தங்கள் முன்னோர்கள் தேடிய பொருளுடன் தாங்களும் சம்பாதித்துச் சேர்த்து அதை வெகுவாய்க் காப்பாற்றி வந்தார்கள்.

   

மகனின் துராக்குதமான நடத்தைக்குப் பயந்து அவனைப் பல விதத்திலும் திருத்திப் பார்த்தார்கள். ஒன்றிலும் பயன் படவில்லை. வீட்டில் வந்த மருமகளின் பொறுமையையும் அவளுடைய 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.