இதைக் கேட்ட லக்ஷ்மியம்மாளுக்கு மனம் மிகவும் உருகிப் போய்விட்டது. "ஐயோ! குணவதி! உன்னரிய மொழிக்கு நான் என்ன பதில் சொல்வேன்? என் கண்ணே! நான் உயிருடன் இருக்கும் வரையில் உன்னைக் கைவிடமாட்டேன். இது சத்தியம். உன்னுடைய கஷ்டம் என்று தான் விடியுமோ எனக்குத் தெரியவில்லை. உன் பொறுமை உன்னைக் காக்காது போகாது. உன்னை நான் தனித்துவிட்டுச்செல்ல மனமிசையமாட்டேன். உன்னையும் கூடவே காசி யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறேன்". என்று தீர்மானித்தாள்.
பின்னர் 10 தினங்களில் கணவன், மனைவி, மருமகள் மூவரும் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வீட்டில் யாருமே இல்லாமையினால் பொன்னுசாமிக்கு இன்னும் குசால் பிறந்துவிட்டது. வீட்டை அடியோடு மறந்தான். காசியாத்திரை போனவர்கள் வீட்டில் வேலையாட்கள் இருவரைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார்கள். இவர்கள் சென்று ஒரு வாரத்திற்குப் பின் ஒரு தினம் இரவு நாலைந்து கள்வர்கள் அவ்வீட்டில் புகுந்து பூட்டுக்களை உடைத்தும், வேலையாட்களைக் கட்டிப்போட்டும் கிடைத்த சகலமானதையும் மூட்டைக் கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். மறுதினம் காலையில் வேலைக்காரி வீடுகூட்ட வந்தபிறகு இந்த அலங்கோலத்தைக் கண்டு ஓலமிட்டு வேலைக்காரர்களின் கட்டையவிழ்த்து மூர்ச்சைதெளியச் செய்தாள். அச்செய்தியை பொன்னுசாமிக்குத் தெரிவித்தாள்.
----
அது கேட்ட பொன்னுசாமி அவ் விஷயத்தில் சிரத்தையே எடுத்துக்கொள்ளாது “போனால் பீடை போகட்டும்” என்று கூறித் தாசி மோகத்தில் ஐக்யமாகிவிட்டான். பிறகு வேலைக்காரர்களே இத் திருட்டு விஷயத்தைப் போலீஸாரிடம் தகவல் கொடுத்தார்கள். காசிக்குச் சென்றவர்கள் ஒரு மாதத்தில் திரும்பி வந்ததும் இக் கொள்ளையைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். வீட்டிலிருந்த பாத்திரங்கள், பண்டங்கள், சில நகைகள் எல்லாம் களவாடப்பட்டிருப் பதைக் கண்டு கண்ணீர் வடித்ததுடன் அன்றைய சமையலுக்குப் பாத்திரமின்றி கடையில் வாங்கும்படியாக நேர்ந்தது. இத்திருட்டு விஷயத்தில் சற்றும் கவனியாத மகனை நொந்து அழுதார்கள்.
இதே ஏக்கத்தினால் பின்னும் சில வருடத்திற்குள்ளாக பொன்னுசாமியின் தந்தை நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்துவிட் டார். "ஒரே ஒரு மகனாகவிருந்தும் தமக்கு அனுகூலமில்லாது போய்விட்டதே" என்ற மனநோயே லக்ஷ்மியம்மாளையும் தாக்கிவிட் டதால் ‘இருவரில் யார்