தாயைக் காப்பாற்றி வந்தார்கள். கோமதியின் மூத்த மகள் பக்குவமான பாவையாக இருப்பதால் அவளையும் முன் கூறிய சனியன் பிடித்து ஆட்டத் தொடங்கியது. இந்த வேதனையைச் சகிக்கக் கூடாத அச்சிறுமி வருந்துகையில் ஒரு தினம் ஒரு கிராதகன் அப் பெண்ணை
வழிமறித்துக் கடுமையான வார்த்தைகளால் பேசி இம்சிக்க எத்தனிக்கையில் அப்பெண் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தைரியமாயும் வீரமாயும் கையிலிருந்த தோட்ட வேலை செய்யும் சிறிய இரும்பு ஆயுதம் ஒன்றினால் அந்த துராத்மாவின் மண்டையில் ஓங்கி யடித்ததோடு அவனை நகா விடாது காலிலும் நன்றாகக் குத்திவிட்டு அவ்விடம் விட்டு ஓட்டமாக ஓடித் தன் வீட்டை படைந்தாள்.
அப்போது மாலை 6 மணி சுமாருக்கு இருக்கலாம். சூரியன் அஸ்தமித்து விட்டான். எங்கும் சிறு இருள் சூழ வாரம்பித்தது. பக்ஷி ஜாதிகளெல்லாம் தம் தம் கூடுகளில் அடைந்து கொள்ள ஆநந்தமாய்ப் பாடிக் கொண்டும், கொக்கரித்துக் கொண்டும் ஓடுகின்றன. மந்த மாருதம் அந்தமாக வீசுகின்றது. இன்னிலைமையில் அச் சிறுமி தனது கற்பைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அத் துட்டனை ஓங்கி அடித்து விட்டு அவன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்த வளவில் "அடேய் பாதகா! நான் ஒரு கொலை செய்யவும் அஞ்சேன். என் கற்பை இழக்க முன் வருவேன் என நினைக்காதே" என்று கூறியவாறு ஓடி வீட்டிற்குள் புகுந்தாள்.
-------
கோமதிக்கு இருமல் நோய் கண்டுவிட்டதால் இரைப்பும் மூச்சுத் திணறலும் வதைக்கின்றன. அச் சமயத்தில் பாலா வென்கிற அம்மாதாசி பெருமூச்சு விட்டுப் பதறிய வண்ணம் அங்கு ஓடி வந்து தன் தாயின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு "அம்மா! நான் கூறப்போகும் விஷயத்தைக் கேட்டுக் கலங்காதே; மனம் சிதறாதே! என் மீது வெகு நாட்களாகக் கறம் வைத்திருந்த கங்காதரனை நீ அறியாய். அவன் இன்று என்னைப் பலாத்கரித்து என்னைக் கெடுக்க முயன்றான். நான் எனது கற்பைக் காத்துக் கொள்ளும் பொருட்டு என் கையிலிருந்த ஆயுதத்தினால் அவன் தலையிலும் காலிலும் அடித்துக் கீழே தள்ளி விட்டுவந்து விட்டேன். அவன் மண்டையில் ரத்தம் வெள்ளமாக வந்து விட்டது. நான் அவ்விடத்தில் நிற்காது ஒடி வந்துவிட்டேன்.; நான் செய்து விட்ட குற்றத்தை யாரேனும் பார்த்திருந்தால் எனக்குப் பேராபத்து சம்பவிக்கப் போகின்றது. அந்த ஆபத்துக்களை நான் திருணமாய் மதிக்கின்றேன்.