(Reading time: 28 - 55 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

மகிழ்ச்சி யடைந்தாள். பிறகு பாலா "எந்த சமயத்தில் யார் வருவார்களோ!" என்கிற பெரும் குழப்பத்துடனேயே ஒவ்வோர் நிமிடமும் எதிர் பார்த்தாள். மனம் அலைந்து கொண்டே இருந்தது. இரவும் சமீபித்தது. அன்றிரவு நித்திரை என்பதே கொள்ளவில்லை, ஏதேதோ பலவிதமான எண்ணத்துடன் தத்தளித்தாள். ஒருவரும் வரவில்லை. ஒரு விஷயமும் தெரியவில்லை. ஆகையினால் இந்த சம்பவம் அறியாதவாறே மறைந்து விட்டதாகத் தாயும் மகளும் எண்ணினார்கள்.

   

உதயமாயிற்று. பாலா வழக்கம் போல வேலைக்குச் செல்லும் நேரம் சமீபித்தது. வேலைக்குச் சென்ற விடத்தில் என்ன விஷயம் காதில் விழுமோ! எவ்விதமான செய்தி எட்டுமோ! என்கிற பெரும் பீதியோடும் கலக்கத்தோடும் அவள் சென்றாள். தன் மனத்திலுள்ள எண்ணங்களினால் முகத்தில் ஏதேனும் மாறுதல் தெரிந்து விடப் போகிறதே என்கிற கவலையினால் தன்னால் கூடியவரையில் ஒரு சிறு மாறுதலையும் காட்டிக் கொள்ளாது தன் வேலையைச் செய்யப் புகுந்தாள்.

   

-------

   

முதல் நாள் தன்னால் அடியுண்டவன் அன்று வேலைக்கு வராமையைக் கண்டு மனத்திற்குள்ளேயே எண்ணறியாத கலக்கமும் விசனமும் உண்டாகியது. இவ் விஷயத்தைப் பிறரைக் கேட்கவும் அஞ்சினாள். அப்படியே தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வந்தாள். மகளைப் பார்த்த உடன் கோமதி "அம்மா! உன்னுடைய செய்கை அப்படியே மறைந்து விட்டதா! ஏதேனும் விசேஷ முண்டா?" என்று கேட்டாள்.

   

இதுகேட்ட பாலா "அம்மா! இது பரியந்தம் ஒருவித தகவலும் தெரியவில்லை. எவ்விதமான பேச்சும் பிறக்க வில்லை. அந்த ஆசாமியையே காணவில்லை. காரணம் என்னவோ கடவுளுக்குத் தான் தெரியும். நானும் இது விஷயமாக யாருடனும் எதுவும் பேசவோ, கேட்கவோ இல்லை.' இனி போகப் போகத்தான் தெரியும்" என்றாள். பிறகு ஒருவித விசேஷமுமின்றி அமைதியாக அவ்விரவு கழிந்தது,

   

மறுதினம் உதயமாயிற்று. பாலா வேலைக்குப் புறப்படு முன்னர் ஓர் கிழவி அங்கு வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்து "அம்மா! இக் கடிதத்தைத் தம்மிடம் கொடுக்கும்படியாக கங்காதரன் கூறினார்." என்று கொடுத்துவிட்டு உடனே சென்றாள். இதைக் கேட்ட தும் பாலாவுக்குக் குலை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.