நிலைமையை ஊகித்தறிவதே வெகு பிரயாசையாகிவிட்டது. அவள் வெகு தைரியத்துடன் "ஐயா! இதென்ன ஆச்சரியம்! நீர் சொல்வதெல்லாம் எனக்கு வியப்பாயும் வேடிக்கையாயும் இருக்கிறதே! நீரா என் தந்தை! உமது உதிரத்திலா நான் பிறந்தேன்?....... இத்தகைய வார்த்தைகளால் பசப்பின், தந்தையென்று தளுக்குக் காட்டிச் சிந்தையின் எண்ணத்தை முடித்துக் கொள்ளலாமென்கிற தீர்மானமே! அங்ஙனம் ஏன் இருத்தல் கூடாது? திடீரென்று உம்மை நான் தந்தை என்று நம்புதல் எப்படி சாத்யமாகும். இந்தக் கட்டுக்கதையை நான் ஒருபோதும் ஒப்ப முடியாது," என்றாள்.
கங்காதரன்.- -என் கண்ணே! உன் மனோ உறுதியையும் தைரியமான மொழிகளையும் காணக் காண எனக்குண்டாகும் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை. நீ சொல்வது முற்றும் உண்மையே! நீ நம்புவது சாத்யமற்றதேயாகும். காமப் பார்வையோடும், காம எண்ணத்தோடும் நோக்கிய பாவி நான்தான். ஆயினும் பின்னர் எனது அவ்வெண்ணங்கள் தீக்கிரையாயின, நான் தற்போது அந்த களங்கத்தினின்று களையப்பெற்றுள்ளேன். உன்னை ஈன்ற தந்தையாக விருக்கிறேன்.
------
என் கண்ணே! பாலா! கோமதி சுகமா! நீலா சுகமா! கேசவனும் மருதப்பாவும் சுகமா! என் விதி என்னை எவ்வெவ்விதம் ஆட்டியது என்பதை நீ கேட்டால் நகைப்பாய்; பெற்ற மகளைப் பெண்டாள எண்ணியத் துரோகியின் மற்றைய செய்கைகளைப்பற்றி நான் கூறவேண்டுவதில்லை. என்னைப்போன்ற கசடன் உலகத்தில் இருக்கமாட்டான் என்பது சத்தியம். என் செல்வமே! உன் திரு முகத்தை நான் காமப் பார்வையினால்தான் முதல் முதல் நோக்கினேன். குழந்தைப் பருவத்தில் என் விதி என்னை ஓர் தாசிக்கு அடிமையாக்கியதால் அவள் முகமன்னியில் மற்றைய முகம் பார்த்த தில்லை. உங்களைப் பெற்ற பாசமும் அக்காலைமுதல் இக்காலைவரை மறைந்திருந்தது. படுபாவி நான் சொல்வதை நீ நம்பாமல் விழிப்பதை உன் முகங் காட்டுகின்றது. பெற்ற மகளைப் பெண்டாள நினைத்த சண்டாளனைக் கண்டாலும் பாதகமே; இதை உன் இதயம் உனக்கு எடுத்துக் கூறுகின்றது. என்னையும் குத்திக் காட்டுகின்றது. என் கண்ணே! பாலா!
என்னை நீ ஒரு நாளாயினும் நேரில் நன்றாகப் பார்த்ததில்லையாதலால் என்னுருவமே உனக்குத் தெரியவில்லை. உன் அன்னை என்னைப் பார்த்தால் தெரிந்துகொள்வாள்: ஹா!...... அந்த உத்தமியின் முகத்தில் எவ்விதம் நான் வெட்கமின்றி விழிப்பேன்?.... ஐயோர் என்