(Reading time: 28 - 55 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

என்னை விட்டு ஒழிந்தன. ஆனால் என்னுள் அவிவேகமாக நிறைந்து கிடந்த சிற்றின்பப் பேய் மட்டும் என்னரிய புதல்வியின் கை வாளினால் ஒழிந்தது. இனி நான் ஓர் புனிதன்தான். எனக்குற்ற இச் சம்பவத்தினால் புத்துயிர் பெற்றவனானேன்...

   

கோமதீ!...என் கண்ணே! பாலா!.... செல்வி!. நீலா!.... நான் இக் கதியை அடைந்ததற்குக் காரணமும் அந்த துராத்மா வேசியின் உறவேயாம். என்னை நல்வழிப் படச் செய்ததும் அவ்வேசி உறவேயாம். மகா கொடிய பாதகத்தில், காள கோடி சர்ப்பத்தின் மத்தியில் நான் இருப்பதை யறியாது பேராநந்த சுக-போகத்திலிருப்பதாக மனமகிழ்ந்து அக்கினி சாக்ஷியாக மணந்த மனைவி-யையும் நான் பெற்ற மக்களையும் துறந்தேன். அவ்வேசியுடன் ஊரை விட்டுச் சென்றேன்.அவள் இழுத்துச் சென்ற விட மெல்லாம் நாய் போல லோல் பட்டேன். சில வருடங்கள் அம் மாதிரியாகக் கழிந்தன. அந்த வேசிக் கழுதை மற்றும் பலருடன் நட்பு கொண்டு என்னை அலக்ஷியம் செய்து விலக்கினாள், நான் அவள்பால் வைத்திருந்த ப்ரியத்தினால் வேலைக்காரனைப்போல வேனும் வீட்டிலேயே இருப்பதாகத் தீர்மானித்தேன். அந்த வேசியினுடைய மற்ற சினேகிதர்களுக்குள் பலத்த சண்டை ஏற்பட்டது.

   

ஒரு தினம் காலையில் அவ்வேசி குத்தப் பட்டுக் கொலையுண்டு கிடந்தாள். இதைப் பார்த்து நான் நடுக்கலுற்றேன் அதே சமயம் அவளுடைய சினேகிதன் அங்கு வந்து தான் ஏதுமறியாதவன் போல அந்த கோரக் கொலையைக் கண்டு திடுக்கிட்டு "அடேய் எங்களுடன் அவள் சினேகமாக விருக்கிறாள் என்கிற ஆத்திரத்தினால் நீதான் இக் கொலையைச் செய்து விட்டாய்! உன்னையின்றி வேறு யாரும் இக் காரியம் செய்யமாட்டார்கள். இப்போதே உன்னை. போலீஸாரிடம் பிடித்துத் தருகிறேன்" என்றான்.

   

---------

   

இது கேட்ட எனக்குப் பெருத்த அதிர்ச்சியும் ஆவேசமும் உண்டாகி விட்டது. அவனுக்கும் எனக்கும் பலத்த சச்சரவும் சண்டையும் நடந்தது. நான் அவனை அடித்துப் போட்டுவிட்டு அந்த நிமிடமே அவ்விடத்தை விட்டு ஓடோடியும் வந்து விட்டேன். குற்றமோ கொலைக் குற்றம். என்னை எப்படியும் போலீஸார் கண்டு பிடித்து விடுவார்களே என்கிற ஓர் யோசனையினால் நான் என் முகம் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு நெருப்பினால் முகத்தைச் சுட்டு இவ் வடுக்களுண்டாக்கிக் கொண்டேன். நான் வெகு தூரம் சென்று ஓர் ஊரில் தங்கினேன். அங்கு ஓர் கங்காணி சில பிரயாணிகளை அழைத்துக் கொண்டு இத் தீவுக்கு வருவதற்குத் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.