(Reading time: 28 - 55 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

தன் வீடு சேருகிற பரியந்தம் வாய் திறவாது மவுனமாகவே சென்றான். வண்டியும் பாலாவின் வீட்டை யடைந்தது. பாலா இறங்கி அவனையும் அழைத்துக் கொண்டு நேரே தன் தாயிருந்தவிடத்திற்குச் சென்று "அம்மா! இந்த விசித்திரமான விஷயத்தில் நீ தான் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதனால் மன அதிர்ச்சி அடையாதே. இதோ வரும் இம் மனிதர் யார் என்று கவனித்துப் பார்." என்று கூறிக் கங்காதரனைக் காட்டினாள்.

   

--------

   

எதிர்பாராத இவ் வார்த்தைகளைக் கேட்ட கோமதி மெல்ல எழுந்து உட்கார்ந்து வந்த மனிதனை உற்றுக் கவளித்தாள். அதற்குள் அம் மனிதன் "ஹா!....கோமதி! சண்டாளன் என்னை உனக்குத் தெரியவில்லையா!" என்று கூறிக்கொண்டே கோமதியின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கோவென்று கதறினான். கோமதிக்கு அவனை தூரவிருந்து பார்க்கையிலேயே தன் புருஷனின் ஜாடையாக விருப்பதைக் கண்டு ப்ரமித்தவளவில் இவ்விதம் அவனே கூறிக் கொண்டு அருகில் வந்ததும் உண்மையில் கோமதிக்கு ஒன்றுமே தோன்றாது மன அதிர்ச்சியினால் மெளனமானாள்.

   

ஐந்து நிமிடநேரம் எவ்விதமான சந்தடியுமின்றி மூச்சுப் பேச்சற்று அவ்விடம் நிசப்தமாக விருந்தது. பிறகு கோமதி சற்று தெளிவுற்று, "தங்கள் நினைவில் இவ்வனாதைப் பரதேசிகள் இப் பூவுலகில் இருக்கிறார்கள் என்பது உதயமாயிற்றா! அன்றி இதுவும் வேஷந்தானா! இதென்ன முகத்தில் தழும்புகள் இருக்கின்றனவே!.... வேசி மோகமும்...குடியின் கோரமும் தங்களை விட்டதா! என்ன ஆச்சரியம்.... பெற்ற மகளையா பெண்டாள நினைத்தீர்கள். ஐயோ! கலிகாலக் கொடுமையே!" என்று கூறி முடிப்பதற்குள் பாலா "அம்மா! இவரா என் பிதா! உண்மையில் என் பிதா தானா! இத்தகைய காமுகனாயும் குடியனாயுமுள்ள இவர் உதிரத்திலா நான் ஜெனித்தேன்!" என்று வியப்பே வடிவமாக நின்றாள்.

   

-------

   

கங்காதரன்:- என்னுடைய கெடுமதியின் கொடுமையினால் நான் செய்த தீங்கிற்கு என்னை நீங்கள் என்ன சொன்ன போதிலும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக விருக்கிறேன். என்னுடைய பிழைப்பின் கேட்டிற்கு இதுமட்டுமல்ல; இன்னும் எதை வேண்டுமானாலும் கூறுவதற்கு இடமுண்டு. கோமதி! என்னைப் பிடித்து ஆட்டிய இரண்டு பைசாசங்களும் முன்பே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.