கவலைப்படாதே! நான் இழந்த புதையலை உன்னால் கண்டெடுத்தேன். பெரும் நிதியை அடைந்தேன். நான் உன்னால் பெரும் பாபத்தினின்றும் விடுதலை யடைந்தேன். புத்துயிர் பெற்றேன். இனிமேல் நான் புதிய மனிதன். அதை மட்டும் சத்தியமாக நம்பு." என்றான்.
பிறகு கேசவன், மூத்த குமாரன் முதலியோரைப் பற்றித் தெரிந்து கொண்டு விசனித்தான். பிரிந்த கால வர்த்தமானங்களைக் குறித்து பேசிக் கொண்டே இருக்கையில் இவர்களிருக்கும் அறைக் கதவு இடிக்கப்பட்டது. யாரென்று பாலா கேட்டாள். உடனே, வெகு அட்டகாசமாயும் அதிகார தொனியுடனும் ஒரு குரல் "போலீஸ்! கதவைத் திறவுங்கள்!....என்றதைக் கேட்ட உடனே அந் நால்வரும் இன்னதென்று விவரிக்க வியலாத நடுக்கலும் அபார மான குழப்பமும் அடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த படியே தம்பித்துவிட்டார்கள்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...