முகத்தைக் காணவும் அவள் மனங் கூசுவாளே! கண்மணீ! பாலா! உன் தாயை நான் கடைசீமுறை விட்டுச் செல்கையில் நான்கு மாதம் கர்ப்பவதியாகவிருந்தாளே! என்ன சிசு பிறந்தது. அது உயிருடன் இருக்கிறதா! உன் மூத்த அண்ணன் எங்கே இருக்கிறான்?” என்று ஏதேதோ பேசுவதைக்கேட்ட பாலா வின் மனம் இன்னதென்று விவரம் அறியாது தத்தளித்தது.
--------
தான் என்ன விதமான பதில் சொல்வதென்று யோசித்தாள். பிறகு அம்மனிதனை நோக்கி "ஐயா! உம்முடைய முந்திய செய்கையின் அம்பே என் இதயத்தைத் துளைத்துப் பதிந்துவிட்டதால் தாங்கள் இப்போது சொல்வது எதுவும் என் மனத்தில் பதியவில்லை, நம்பிக்கையும் கொடுக்கவில்லை. நீர் என் பிதாவா, அல்லவா என்பதை நானே நிர்ணயிக்கவும் என்னால் முடியாது. உமது வார்த்தையைக் கொண்டு தீர்மானிக்கவும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆதலால் வீணான கால தாமதம் செய்ய வேண்டாம். நீர் என்னோடு என் தாயின் முன்பு வந்த.பிறகு என் தாய் தீர்மானிக்கின்றபடி நான் நடக்கத் தயாராக விருக்கிறேன். தயவு செய்து நீர் இப்போதே வாரும்" என்று வெகு முடுக்காயும் மனத்தில் பதியும்படியாயும் கூறினாள்.
அம்மனிதன் அதற்கு இசைந்தான்; எனினும் அவனுடைய மனத்தில் ஒரு புறம் அபாரமான வெட்கம் வந்து மூடிவிட்டது. "என் செல்வீ! உன் கையின் ஆயுதத்தினால் என் மண்டையில் நீ தைரியமாய் அடித்ததனால் என் தலையிலிருந்த துர்ச் செய்கைக்கு உதவியான திமிர் படைத்த ரத்தம் பெரும் பாகமும் கொட்டிவிட் டது, பிறகு எனக்கு ஓர் பிரகாசமான புத்தியும், பழைய பாசமும், அறிவும் தோன்றின. அதனால் நான் இழந்த மக்கள் மனைவியை மீண்டும் அடைந்தேன். கண்ணே! உன் வார்த்தைக்கு மறு பேச்சில்லை. நான் அப்படியே வருகிறேன். உன் தாயார் என்னைக் கண்டு வெறுக்காமலிருப்பாளா! கட்டாயம் வெறுப்பாள்... அவ்வுத்தமியின் நற்குணங்கள் அறிந்து அனுபவிக்கப் பாவி நான் பாக்யம் செய்யவில்லை. அவள் என்னை: எட்டி உதைத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கிளம்பு; போகலாம்.' என்றான்.
உடனே ஓர் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் பாலாவும் கங்காதரனும் ஏறிக் கொண்டார்கள். வண்டியும் கிளம்பியது. பாலாவுக்கு மட்டும் மனத்திற்குள்ளேயே பயந்தான்.