தயாராக விருந்ததைக் கண்டு நானும் என் பெயரை கங்காதரன் என்று மாற்றிக்கொண்டு அக் குற்றத்திற்குப் பாத்திரமாகாது தப்பித்துக் கொள்ள இங்கு வந்தேன். இங்கு நான் வந்து ஒரு மாத காலந்தானாகிறது" என்று கூறி முடிப்பதற்குள் கோமதி "ஐயோ! மோசம் வந்து விட்டதா! பாழும் குடியும், வேசியும் மகா கொடிது விஷம் என்பதை அறிந்தும் அதிலிறங்கி பெரும் பாபத்திற்கு ஆளாகியதோடு கொலைக் குற்றமும் சாற்றப்பட்டீரா!.... ஐயோ! கொலையாளி என்.ற பெயருடனா இங்கு ஒளிந்து வருகிறீர் ?" என்று கூறிச் செயலற்று விட்டாள்.
கங்காதரனுக்கோ இன்னதென்று தெரியாதவிதமான துக்கம் தொண்டையை அடைக்கின்றது. கோமதியின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு, "என் கோமதீ ! உண்மையில் நான் ஒருவித குற்றமும் செய்தவனன்று. நான் கடைசீப் பாகமாகிய கொலையில் சம்மந்தப் பட்டவனேயன்று, கடவுள் மீது ஆணையாக நான் கொலை யாளியல்ல. என்மீது வீணான பழிவந்து தாக்கிவிடப் போகின்றதே என்கிற எண்ணத்தினால் நான் இந்த பக்கம் வந்துவிட்டேன். நேரே உங்களிடம் செல்லவும் எண்ணினேன்.
-------
நீங்கள் எங்கே இருக்கி றீர்கள், என்ன செய்கிறீர்கள் என்ற தகவல் ஒன்றுமே தெரிய வில்லை. அது சமயம் விகாரித்தறிவதற்கும் நேரமில்லை. நிலைமையோ பகைவரின் கத்தி முனையில் இருந்ததால் நான் அது காலை ஊரைவிட்டு வெளி யேறுவது தான் உசிதம் என்று தோன்றியதால் நான் உடனே இங்கு வந்து வேலைக்கு ஒத்துக் கொண்டேன். ஒரு மாதமாக நான் இங்கு வேலை செய்தும் நீங்கள் இங்கிருப்பதை நான் அறியவில்லை. ஆனால் நான் கொலைக் குற்றம் என்ற ஒரு பெரிய பட்டத்தோடு வந்திருப்பினும் என்னை இதுகாறும் அழுத்திக் கொண்டிருந்த சிற்றின்பப்பித்து என்னை விட்டு அகலாதிருந்ததால் நான் பெற்ற சிறுமி என்கிற வித்யாசமும் தெரியாமல் காமத்துக்குக் கண்ணில்லை என்கிற பழமொழிப்படிக்கு என்னைச் செய்துவிட்டது.
பார்ப்பதற்கு வெகு சிறியவளாக விருந்தபோதிலும் என்னிடம் அவள் பேசிய பேச்சும், காட்டிய வீரமும், செய்த சூரச் செய்கையும் என்னையே திடுக்கிடச் செய்தது. மகா கொடிய காமுகனாகிய என்னுள்ளத்திலேயே இவ்வீர நங்கையின் செய்கை மிக்க மகிழ்ச்சியையும் என்னையறியாத ஓர் உணர்ச்சியையும் கொடுத்தது. நான் அந்த காயத்துடன் வீட்டிற்குச்