Page 5 of 18
("சத்யவதே" என்ற மெட்டு)
1. பாண்டவநேய சகாயா! மாயா!
ஆண்டருள் செய்திடுவாய் அன்பர் தூயா- பா
2. தேவாதி தேவா! ஸ்ரீ வாஸு தேவா! பாவன நாம ஸ்ரீ பரந்தாமா!
சேவடி தந்தின்பம் சேர்க்திடச் செய்வாய்
3, பார்த்தனுக்குரைத்த பண்புள்ள கீதையில்
"மார்கழி மதி யான்" என்று இயம்பிய
மாதவனே பஜனைக் கிரங்கிவோய்
4. உன்னரும் மக்கட்கு உணர்ச்சி யளித்திட
இன்னமும் தாமதம் ஏற்குமோ கண்ணா!
பன்னக சயனா! பரிவுடன் வா வா-
5. தேசம் செழித்திட கேசவ நின் திரு
மாசற்ற நோக்கருள்வாய் மனோல்லாசா!
பூசுரர் போற்றிடும் புவனப் பிரகாசா !
என்கிற இரண்டு பாடல்களையும் பாடினார்கள். கோமதி இச்சங்கீத ஆனந்தத்தினால் மிக்க