சவத்தை வைத்துக் கொண்டு கத்தினேன்; கதறினேன். பிணத்தின் மேல் விழுந்து புரண்டேன். மூன்று நாள் கண்ணை விழிக்காது கதறினேன். என் மனத்திற்கு முதலில் வேம்பாக இருந்த குணவதி பிணமாகிய பிறகு கரும்பாக இனித்தாள். அதை எண்ணி எண்ணி எங்கினேன். இன்னும் ஏங்கிக் கொண்டே என் பொல்லாத பொழுதைத் தள்ளுகிறேன். கேசவா! பரிமளா! என் செல்வங்களே! தற்போது உங்களிருவரைத்தான் நான் என்னுயிராக மதித்துள்ளேன், என் குற்றத்தை மறந்து விடுங்கள்" என்றான்.
இதைக் கேட்ட இருவரும் கண்ணீர் வடித்தார்கள். பிறகு வெகு நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்து நித்திரா தேவியின் வச மானார்கள். உதயமானதும் கேசவனும் பொன்னுசாமியும் வீடு போய்ச் சேர்ந்தார்கள், பரிமளாவினுடைய கவலைகளோடு அவள் எஜமானரின் ஜீவிய சரித்திரம் அவள் மனத்தை உருக்கியது. அதையே எண்ணிக் கொண்டு அன்று பூராவும் இன்பமும் துன்ப மும் அடைந்தாள்.
------
பின்னும் சில தினங்களாயின. முன்னர் தெரிவித்தது போலப் பரிமளாவும் கேசவனும் கடைசீ தரமாக நடிக்கும் நாடகத்தைப் பொன்னுசாமி தயார் செய்தார். ஊரெங்கும் நோட்டீஸ்கள் பறக்க வாரம்பித்தன.
===========
"நாடகத்தில் நற்சியாதி பெற்று வரும் சிறுவன் கேசவனும், சிறுமி பரிமளவல்லியும் சேர்ந்து நடிக்கும் கடைசி நாடகம் இதுவே யாகும்' நாடகப் பிரியர்கள் பார்க்கத் தவறாதீர்கள். நிகரற்ற வள்ளி நாயசியாயும் சுப்பிரமணிய வேடனாயும் அவ்விரு சிறுவர்களும்; தோன்றி நடிக்கும் கடைசீ தரு ணம் இதுதான். இனிமேல் காணக் கிடைக்காது, இனி மேல் நாடக மேடையில் இரு ரத்தினங்களையும் சேர்ந்து காண முடியாது: அனேக காரணங்களை முன்னிட்டு பரிமளா இனி நாடகம் நடிக்கப் போவதில்லை. நமது வேண்டுகோளுக்கிணங்கி இந்த வள்ளி நாடகம் ஒரே ஸ்பெஷல் நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதுகாறும் நாடக உலத்தையே பிரமிக்கச் செய்து எல்லோருக்கும் கர்ணாநந்தமான சங்கீதத்தை அள்ளி இறைத்த சிறுமிக்கு