கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் துடித்தேன்; தத்தளித்தேன். விரக்தி கொண்டேன். என் கர்மம் தொலையும் பொருட்டு சில வருடங்கள் காசி க்ஷேத்திரத்திலேயே கங்கை நீராடிக் காலத்தைத் துலைத்தேன்.
என் மனம் சமாதானமாகவில்லை. என்னால் கொள்ளை டிக்கப்பட்ட செல்வத்தில் பெரும் பாகமும் பல வழிகளில் தொலைந்த தெனினும் இன்னும் ஒரு லக்ஷ ரூபாயிக்கு என்னிடம் இருப்பது எனக்குப் பெரும் பாரமாக இருந்தது. அதை என்ன செய்யலாம் என்று நினைத்து அதே யோசனையிலிருக் கையில் ஒரு தினம் கனவில் ஒரு விருந்தர் தோன்றி, "மகா கர்ம சண்டாளியாகிய உன் பணத்தை தர்மத்திற்கு வாரி இறைத்தால் உன் பாபம் கொஞ்சம் கழியலாம்." என்று கூறி னார். அன்று முதல் என்ன விதமான தருமம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இந்த நற்குண நாடகக் கம்பெனியை நடத்துவது அந்த புண்யவான் என்றும் அவருடைய மனம் விரக்தி மார்க்கத்தில் பறந்து விட்டதென் றும், தர்ம ஸ்தாபனங்கள் மலிந்திருப்பதையும், நீயும் கேசவன் என்ற சிறுவனும் நடிப்பதும் முதலிய பல விஷயங்களையும் நான் ஒரு தினம் பத்திரிகையில் படித்தேன்.
இந்த செல்வத்தில் பெரும் பாகமும் அந்த உத்தமராகிய பொன்னுசாமியினுடைய தென்பதை இப் பாவியினுள்ளம் மறக்க முடியாது. அவ்வுத்தமரின் சொத்துக்கள் அவரிடமே சேரட்டும். அவருடைய கரத்தினாலேயே தரும வழியில் வினியோக மாகட்டும். இப் பாவியின் மிகுதி சொத்தும் பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறுவதே போல ஆகட்டும் என்கிற நோக்கங் கொண்டு அதை அவரிடமே சேர்க்க எண்ணி இவ்வூருக்கு வந்தேன்.
--------
ஆனால் எனது வெட்கங் கெட்ட முகத்துடன், மான மிழந்த உருவத்துடன் அந்த புண்ணிய மூர்த்தியின் எதிரில் வருவதற்கு மனங் கூசியது. இதை யாரிடம் எவ்வகையில் சேர்ப்பதென்று அறியாது தவித்தேன். தண்ணீராயுருகி னேன். உங்கள் நாடக நடிப்பைக் காண ஆவல் கொண்டு சில நாடகங்களையும் கண்டு களித்தேன். உனக்கு ஒரு வைர பதக்கமும் பரிசளித்தேன். பிறகு உன் மூலமாகவே இதை உன்னி டம் சேர்ப்பதென்று தீர்மானித்துக்கொண்டு என் வீட்டு வேலைக் காரனை யனுப்பி விசாரித்துவரச் செய்தேன். உன்னுடைய உத்தரவு கிடைத்த பிறகே இக் கடிதம் எழுதலானேன்.