(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal


கழல் பணிந்தால் பிணி தீர்ந்திடுமே
(5) சுத்தசுதாமன்போல் பக்தி செய்தால் நித்ய
சொர்க்கப் பதவியும் கிட்டிடுமே
உத்தம பக்தர்போல் சத்திய நெறியுடன்
உழைத்திடில் கருணை கிட்டிடுமே!
("ஷடானன” என்ற மெட்டு)

1. தாயே கதி! நீயே துணை சேயான் போற்றிச்
செய்யுமுறை கேளாய்-
2. மாயவன்மன மகிழ்ராணியே!
வேயர் போற்றும் தேவி! மேவும் ரங்கனாவி!- தா-

3. பங்கஜாஸனீ! பத்மலோசனீ!
அங்கஜமாதே! அம்புஜபொற்பாதே
மங்களவல்லி! மகிழ்வேதவல்லி!
பொங்கும் அல்லிக்கேணி; புகழ்வாஸினீ-தா-

   

-------

அம்மா! நான் சங்கீதத்தின் கரையை அறிந்த கலாவதியல்ல. எனக்கு குருமுகமான பாடமும் இல்லை. ஏதோ அந்த வாணியின் அருள் பிரசாதம் அவர் உண்மை பக்தர்களிடையே சிந்தியபோது ஒரு துளி என்னையறியாது என்மீதும் படிந்திருக்க வேண்டும். அன் னாளின் அனுக்கிரகத்தால் ஏதோ பாடுகிறேன். என்னுடைய சங்கீதத்தின்மீது விருப்பங்கொண்டு கேட்டதால் பாடினேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லலாமல்லவா?" என்று குயில் போலக் கூறினாள்.

   

வந்த மனுஷி அந்த தேவகானத்திற்கு ஒப்பான சங்கீதத்தைக் கேட்டு மட்டிலடங்காத மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக "பரிமளா! நானே மகா சண்டாளி! பெரும் பாவி! என்னைப் போல இவ்வுலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். என் செவிகளுக்கும் மனத்திற்கும் பேராநந்தத்தை வாரி யளித்த உத்தமச் சிறுமியாகிய உனக்கு நான் எவ்வகையிலும் கைம்மாறு செய்ய கடமைப் பட்டிருக்கிறேன். எனினும் மகர கொடிய பாபத்தைச் செய்துள்ள எனது கைம்மாறை வயதில் சிறுமியாயினும் நன்னெறியோடு ஒழுகும் நீ எதிர்பார்க்கமாட்டாய்! உனது சங்கீதம் எத்தகைய இனிப்புடன் இருக்கிறதோ அதேபோன்று உன்னுடைய கீர்த்தியும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.