(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

ஒழுக்கமும் பிரகாசிக்கின்றன. குழந்தாய்! இதோ என்னுடைய ஞாபகார்த்தமாக இச்சண்டாளியின் கர்ம வினைகள் அலையும் பொருட்டும் உத்தமர்களின் உள்ளத்தில் என்னுடைய நினைவு இருக்கும் பொருட்டும் இந்த கடிதத்தை வாங்கிக்கொள். காரணம் கேட்காதே! நீ சற்றுமுன் பாடிய பாடலில் அந்த ஆதிமூர்த்தியின் பாதம் போற்றினால், நாம மந்திரம் பஜித்தால், திவ்ய சரிதையைப் பாராயணம் செய்தால் பாபம் தீருமென்ற மார்க்கம் அறிந்தும் அறியாமல் பாபக்கடலில் மூழ்கி பாதகியானேன்! செல்வீ! பரிமளா! நான் இவ்விடம் விட்டுச் சென்ற பிறகு இந்த கடிதத்தை உடைத்துப் பார். நான் சென்றுவருகிறேன்." என்று கடிதத்தைப் பரிமளாவின் கையில் கொடுத்துவிட்டு மறு பேச்சுக்கு எதிர் பார்க்காது ஒரே விசையாக எழுந்துபோய் விட்டாள்

   

-------

   

கேவலம் சிறுமியாகிய பரிமளவல்லி ஒன்றுமே தோன்றாது- விவரம் தெரியாது - கலவரமடைந்தாள். க்ஷண நோத்திற்குள் அந்த அம்மாள் மறைந்துவிட்டாள். பிறகு பரிமளா அந்தக் கவரை உடைத்தாள். அதில் ஒரு கடிதமும், ஒரு ஒட்டிய கவரும் இருந்தது கண்டு அக் கடிதத்தைப் படிக்க வாரம்பித்தாள்.

   

“வயதில் சிறுமியாயிருப்பினும் மன உறுதியில் மகிமை பெற்ற மங்கையே! பரிமளவல்லீ! இக் கடிதத்தை நான் எழுது வதற்கு முன்னர், சுமார் எத்தனையோ நாட்கள் - எத்தனையோ இரவுகள் - என் மனம் அலைபாய்ந்து தத்தளித்தது கண்ணீர் ஆறாய் ஓடிற்று. என்னுடைய பாபக் குவியல்களெல்லாம் ஒவ்வொரு கொடிய மிருகம் போன்று என்னுடைய கண் முன்பு தோன்றி என்னைக் கடிப்பதாயும், குத்துவதாயும் என் மீது பாய்வதாயும் என்னைச் சித்திரவதை செய்வதாயும் தோன்றி வதைத்தன. இதனால் எத்தகைய கொடிய பாபத்தைச் செய்திருப்பேன் என்று நீயே அறிந்து கொள்ளலாம். என்னுடைய சகலமான செய்கைகளையும் கடவுள் பார்த்திருக்கிறான் என்கிற எண்ணம் எனக்கு உதயமாவதற்கே என் கன்மா இடங் கொடுக்காது சகடம் போலத் தடுத்தது. என் பாபக் குவியல்களை - பயங்கரத்தை-நீ படிக்கும்போதே உள்ளம் நடுங்குவாய்; அத்தகைய கொடுமையை நானே மனத் துணிந்து செய்திருக்கிறேன்.

   

பரிமளா அதிகமாக வளர்த்திக் கொண்டு போக என் மனம் இடந்தரவில்லை. என்னுடைய சரித்திரத்தின் சுருக் கத்தை அறிந்து கொள். என்னால் கெட்டு அனியாயமான- நிர் மூலமான, அதோகதியான - பூண்டற்று விட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.