"அடேய் கேசவா!
நீ உயிருடன் இப் பூவுலகில் வாழ வேண்டுமாயின் இனி மேல் பரிமளாவின் நினைவை மறந்துவிடு. அவளைச் சந்திப்பதை விட்டு விடு. இந்த கடிதத்தை ஏதோ ஓர் விளையாட்டுக் கடிதமாகவோ, வம்புக் கடிதமாகவோ நினைக்காதே! இக் கடிதத்தில் கண்டபடிக்கு நீ நடக்காவிடின் இக் கடிதமே உனக்குக் காலன் என்பதை மறக்காதே ! இனி நீ அவளைச் சக்தித்தால் உனக்குப் பேராபத்து விளையும், அவ்வாபத்தில் சிக்கிவிட்டால் எமனு கில் சென்றுதான் மீட்சி யடையவேண்டும். ஜாக்ரதை! இக் கடிதம்தான் உனக்கு எச்சரிக்கை யாகும். உஷாராக விரு.
இங்ஙனம்
............
அதைப் படித்ததூம் அவள் திடுக்கிட்டாள். “ஹா! இதென்ன பெரும் மோசமாக விருக்கிறதே! ஐயோ! கடவுளே! இதுவும் ஒரு சோதனையா ?' என்று அபாரமான சோகத்திலாழ்ந்தாள்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...