(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

பரிமளா! உன்னுடைய எஜமானரிடத்தில் இக் கடிதத்தைக் காட்டு. இதோடு இருக்கும் கவரினுள் மொந்த ரூபாயிக்கும் ஒரு செக்கு என் கை யெழுத்துடன் இருக்கிறது. அதையும் உன் எஜமானரிடம் சேர்த்துவிடு. அவ்வுத்தமரிடத்தில் நான் மன்னிப்பு கேட்பதற்கும் அருகதை யற்ற பாவியாகி விட்டேன். அவர் மனம் போலச் செலவிட்டுக் கொள்ளட்டும். அதில் என் இறந்த புதல்வியின் ஞாபகமாக உனக்கு ஒரு பத்தாயிர ரூபாய்க்குத் தனியாக ஒரு செக்கு வைத்திருக்கிறேன். அதை நீ அங்கீகரிக்க வேண்டுகிறேன். "இத்தகைய பாவியும் உலகத்திலிருக்கின்றாளே" என்று ஆச்சரியப் படுவாய்; இனி என்னை- என் ப்ரேதத்தை - ஒருவரும் கண்ணாலும் காண முடியாது. இது நிச்சயம், பரிமளம் மிகுந்த பரிமளா! இதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாயாக,

   

இங்ஙனம்

   

மகா கொடிய சண்டாளி

   

கொலைகாரி

   

----------

   

இக் கடிதத்தைப் படித்த பரிமளாவின் உடல் உண்மையி லேயே ஆடிற்று. தலை கிறு கிறுத்தது. அவள் 10 நிமிட நேரம் பதுமை போலானாள். "ஆகா! இதென்ன ஆச்சரியம்! இப்படியும் நடக்குமா!?” என்று அபாரமான வியப்பு கொண்டாள். அக் கடிதத்திற்குள்ளிருந்த மற்றொரு கடிதத்தையும் உடைத்து செக்குகளைப் பார்த்தாள்; கூறவியலாத ஆச்சரியமடைந்தாள். உடனே அக்கடிதத் துடன் அவ்வறையின் மற்றொரு கதவைத் திறந்து கொண்டு ஓடினாள். அங்கு வீற்றிருந்த பொன்னுசாமியினிடம் கடிதத்தை நீட்டி, "பெரியவரே! இதோ இதைப் பாரும். " என்று கூறியவாறு கொடுத்து வியப்பே வடிவமாக நின்றாள்.

   

அன்றைய தினம் பரிமளவல்லியைப் பார்க்க வருவதாகச் சொல்லியவர்கள் பாராக விருக்குமோ, என்னவோ! எதேனும் தீங்கு செய்பவர்களாக விருப்பார்களோ என்கிற; ஒரே எண்ணத்தினால் அவ்வாறு ஏதேனும் நடக்கும் சமயம் வாய்த்தால் காப்பாற்றும் நோக்கத்துடன் கேசவனும், பொன்னுசாமியும் அவ்வறைக்குப் பக்கத்து அறையில் தயாராக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.