(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

வியப்புடன் "தந்தையே! இதென்னவிது? இதில் எனக்குத் தகவல் ஒன்றும் விளங்கவில்லை; எனினும் உங்களை அதோகதியாக்கிய பாவி ஒரு உயிர் இருப்பதாக அறிகிறேன். அவ்வளவுதான் பரிமளாவும் அறிந்திருப்பாள். விஷயத்தை விளங்கச் சொல்லுங்கள்: உங்கள் மனம் இத்தகைய தத்தளிப்பையடைவ தற்குக் காரணம் யாது? எங்களுக்கு உரைக்கவேண்டும்." என்று கேசவன் கேட்டான். பரிமளாவும் "தந்தையே! இதென்ன! தாங்கள் ஏன் மாறுதல்களை யடையவேண்டும்? அந்த அம்மாளிடத்தில் தங்களுக்குச் சம்மந்தம் இருந்ததாகக் கூறுவது உண்மையாக விருப்பினும் அதுபற்றி கவலையேன் அடையவேண்டும். எங்களிடம் விஷயங்களைத் தெரிவியுங்கள்." என்று கெஞ்சிக் கேட்டாள்.

   

-------

   

பொன்னுசாமியின் மன நிலைமை மிகவும் கேவலமாகிவிட்டது. பிறகு அதைச் சமாளித்துக்கொண்டு தன்னுடைய ஜீவிய சரிதை முற்றும் ஒன்று விடாது கூறி "என் கண்மணிகளே! என்னுடைய பிறவியின் கேட்டைப் பார்த்தீர்களா? எஜமானனின் பவிஷு நன்றாகத் தெரிந்துவிட்டது. என் சரிதை இவ்விதம் இருக்குமென்று நீங்கள் கனவிலும் கருதி இருக்கமாட்டீர்கள். இந்த பிசாசம் இங்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என்னுடைய பழைய கதைகளை நினைப்பூட்டுதற்கே இந்த மூதேவி இங்கு வந்தது." என்று நிரம்பவும் விசனித்தார்.

   

இந்த வாலாற்றைக் கேட்டு இருவரும் கட்டு மீறிய ஆச்சரிய மும் பிரமிப்புமடைந்து "தந்தையே! நீங்கள் சொல்லிய விஷயங்கள் உண்மையில் நடந்தனவா! அல்லது நாவலில் படித்ததைக் கூறுகின்றீர்களா! குணவதியம்மாளின் பெயராலா இந்நாடகக் கம்பெனி நடை பெறுகின்றது. ஆகா! என்ன துக்ககரமான செய்தி! இதைக் கேட்கும் போதே எங்கள் மனம் பதறுகின்றது. இத்தனைத் துன்பங்களை யும் எவ்விதம்தான் அனுபவித்தீர்களோ! நீங்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்பது இப்போதுதான் தெரிகின்றது. பெரிய வரே! தாங்கள் எத்தனை தப்பிதம் செய்திருந்த போதிலும் அவைகளின் தீமையை உணர்ந்து இப்போது ஓர் துறவிபோல ஆய்விட் டது மிகவும் போற்றத் தக்கதாகும். நாங்கள் இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டதனால் ஏதோ மாறிவிடுவோம் என்று கனவிலும் கருதவேண்டாம். எங்களிருவருக்கும் புத்துயிரளித்துக் காப்பாற் றிய கர்த்தாவாகிய உங்களை நாங்கள் மறந்தோமானால்- உங்களிடம் வித்யாசம் நினைத்தோமானால் - எங்கள் கண்ணவிழ்ந்து திண்டாடுவோம். எந்த காலத்திலும் நாங்கள் தங்களை தெய்வமாகவே கொண்டாடுவோம். இது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.