நாம் கடைசீயாக ஏதேனும் கைம்மாறு செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். அக் கடமையாவது, இந்த கடைசீ நாடகத்தில் வசூலாகக் கூடிய தொகையை அச் சிறுமிக்கு நன்கொடையாக அளிப்பதே அச் சிறுமியின் விஷயத்தில் நாம் இந் நன்றியறிதலைக் காட்ட வேண்டுவது முக்கிய மாதலால் நாடகாபிமானிகள் எல்லோரும் தவறாது விஜயம் செய்வார்களென்று எதிர் பார்க்கப்படுகின்றது.
=========
---------
மேற்கண்ட நோட்டீஸ் ஊரெங்கும் ஒட்டப்பட்டும் வீட்டிற்கு வீடு கொடுக்கப்பட்டும் வந்தது. நாடகத் தேதியும் சமீபித்தது. பரிமளாவும் கேசவனும் வெகு பொருத்தமாயும் இனிமையான சங்கீதத்துடனும் நடித்துப் பார்க்கப் போவது இதுவே கடைசி யாகையினால் அனேக ஜனங்கள் திகள் திரளாகக் கூடிவிட்டார்கள். எட்டு மணிக்கே கொட்டகையில் இடம் கிடைக்காது போய் விட் டது, பரிமளாவின் கானத்தைக் கேட்டு மகிழ்வதற்கு ஆயிரக்கணக் கான கூட்டம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சரியாகக் குறித்த நேரத்தில் நமது பரிமளவல்லி
(இந்துஸ்தானி காபி ராகம்; ஏக தாளம்)
1. ஸ்ரீ ரகுநாதா! வாரிஜ பாதா!
தாரக நாமஹரே! நானவர் காலா!— த-
2. இக்ஷ்வாகு வம்சா! லக்ஷ்மீ ப்ராணேசா!
பக்ஷிவாகன நேசா! ஜெய சர்வேசா- ப-
3 அசுர சம்ஹாரா! சசிமுகதீரா!
வசுந்தர பரிபாலா! மங்கள லீலா- வ-
4. ஜானகி ரமணா! ஸரஸிஜ சரணா!
தீனதயாபரணா!திவ்ய கருணா- தீ-
என்கிற பாடலை வெகு இனிமையாக தேனோ, பாகோ, தெவிட்டா வமுதோ என்னும்படியாகப் பாடிக் கொண்டே தினைப்புனம் காக்கும் வள்ளியாகத் தோன்றினாள். இதுபரியந்தம்