அமைந்ததை விடப் பன்மடங்கு அதிகரித்த இன்பகரமாக அன்று நாடகம் வெகு மனோகரமாக விருந்தது. கேசவனும் வெகு திறமையாக நடித்தான்.
நாடகம் முடிவடைந்தது, அன்றைய தினம் வசூலான பணத்தை பொன்னுசாமி அந்த நாடக மேடையின் மேலேயே அரியதோர் உபன்யாசம் செய்து அதைப் பரிமளாவுக்குக் கொடுத்து விட்டார். பரிமளாவும் பிரதி வந்தனம் கூறித் தான் இதோடு விலகிக் கொள்வதைப்பற்றி உருக்கமாகப் பேசிப் பின்னர் விடை பெற்றுக் கொண்டாள். நாடகம் கலைவுற்றது. எல்லோரும் வீடு போய்ச் சேர்ந்தார்கள். பரிமளவல்லிக்கு மட்டும் அன்று என்றுமில்லாத துக்கம் அவளை யறியாது பொங்கி விட்டது; வீட்டிற்கு வந்து படுத்துவிட்டாள்.
-------
மறுதினம் காலையில் அனேகர் பரிமளாவைக் காண்பதற்காக அவன் வீட்டிற்கு வந்து "ஏன் நின்று விட்டீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பரிமளா தன் தாயையே விட்டு ஏதோ தக்க சாக்குப் பதில் கூறி யனுப்பி விட்டாள். சில தினங்கள் வரையில் இந்த தொல்லை இப்படியே அதிகரித்திருந்தது.
நாடகம் நடக்கையில் கேசவன் அதன் காரணம் பற்றி பரிமளாவைச் சந்தித்து வந்தான். நாடகம் நின்றுவிட்ட பிறகு பரிமளாவின் வீட்டிற்கு முன் போல அடிக்கடி செல்வதற்கும் சந்திப்பதற்கும் அஞ்சினான். ஒரு தினம் பரிமளாவின் வீட்டிற்குக் கேசவன் வந்தான்.
அவனைக் கண்ட பரிமளவல்லி அழைத்து உட்காரச் செய்து "ஏது! நான் நாடகத்தை விட்ட உடனேயே என்னை மறந்து வீட்டீர்களே! உங்கள் மனம் இதற்குத் துணிந்ததா!" என்று வெகு விசனத்துடன் கேட்டாள்.
கேசவன்:- பரிமளா! நான் எந்த காலத்திலும் உன்னை மறக்க மாட்டேன் என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் நீறு பூத்த நெருப்பு எப்படியோ அப்படித்தான் இனிமேல் நாம் இருக்கவேண்டி இருக்குமென்று தோன்றுகின்றது. ஏனென்பதை நான் கூற வேண்டாம். மகா புத்தி நுட்பமுடையவளாகிய நீயே தெரிந்து கொள்வாய். பரிமளா! எனக்குப் பேசவும் நாவெழவில்லை. என்னால் உனக்கு யாதொரு தீங்கும் நேரிடக்கூடாதென்பதே என்னுடைய நோக்கமாகும். உனக்கு ஒரு அணுப்பிரமாணமும் வருத்தமோ, வசையோ உண்டு பண்ண நான்