(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

சம்மதியேன். அபக்கியாதி என்கிற பெருங் காற்று உன் மீது அடிக்காதிருப்பதை நானும் கவனிக்கக் கடமைப் பட்டுள்ளேன். நாமிருவரும் நாடக பந்தத்திலிருந்து விலகி விட்டது. வெளி ஜனங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்க நான் இனிமேல் அடிக்கடி உன்னைச் சந்திப்பதால் உனக்கன்றோ ஓர் விதமான பெயர் உண்டாகும்........

   

--------

   

பரிமளா:- ஆஹா!....சரியான யோசனை!... இதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டியவளே யாவேன்.... மனத்தில் பதிந்து கிடக்கும் ஆழ்ந்த அன்பை நினைக்கின்... அந்தோ!.... மனம் பகீரென்கின றதே! நண்பரே!

   

கேசவன்:- பரிமளா! உலகம் நம்மைப் பிரித்துவிட நினைத்து விட்டது; ஆனால் அன்பு சேச்சே! நான் இந்த துக்ககரமான விஷயத்தைத் தெரிவிப்பதற்காகவோ இங்கு வந்தேன்.... பரிமளா !.. நான் சென்று வருகிறேன்.

   

பரிமளா - என்ன இது? என்னவோ பேசுகின்றீரே! எனக்குப் புரியவில்லையே! தாங்கள் ஏதோ விஷயத்தை ஒளிப்பது போலப் பேசுகின்றீர்களே! அதென்ன! அதை எனக்குத் தெரிவிக்கலாகாதா! என்னிடம் என்ன வித்யாசம்? விவரத்தைக் கூறும்.

   

கேசவன்:- பரிமளா! ஒன்றுமில்லை. விசேஷமென்ன விருக்கிறது! கடவுளின் ஆணை எந்தெந்த விதமிருக்கின்றதோ அப்படித் தானே யாவும் நடக்கும்... பரிமளா!... என்னுடைய மனத்தவிப் பிறகு உவமை கூறச் சக்தி யற்றிருக்கிறேன். என்னாலான வரையில் உன்னைச் சந்திக்க வேண்டாமென்றே நினைத்தேன். ஆனால் மனந்தாங்க வில்லை. திடீரென்று நான் வராது நின்று விட்டால் நீ என்ன நினைப்பாயோ என்று எண்ணியே வந்தேன். நீ மகா யூகசாலி யாதலால் எனது நிலைமையைத் தெரிந்து கொண்டாய்! இனி நான் எவ்விதம் ஒளிப்பேன்? நம்மிருவருக்கும் இடையில் ஒரு பெரிய எமன் இருக்கின்றது; இதோ தெரிந்து கொள்." என்று ஒரு கடி தத்தை அவள் கையில் கொடுத்தான். பரிமளா வெகு வியப்புடன் கடிதத்தை வாங்கிப் படிக்கலானாள்.

   

---------

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.