உட்கார்ந்திருந்தார்கள். ஏதேனும் அபாயம் நேரும்போலத் தோன்றினால் உடனே ஒரு மணியை அழுத்தினால் அது பக்கத்தறையில் தங்களுக்குக் கேட்கும்; தாங்கள் ஓடி வருவதாகச் சொல்லித் தீர்மானித்திருந்தபடி ஒன்றும் மணியடிக்காததனாலும், பரிமளா ஆனந்தமாகப் பாடியதாலும் ஆபத்து ஒன்றுமில்லை என்பதாக இருவரும் எண்ணி அவ்வறையில் உட்கார்ந்திருந்த தருணம் பரிமளா கடிதத்தைப் பொன்னுசாமியின் முன்பு நீட்டியதும், பொன்னுசாமி ஆச்சரியப்பட்டு அதை வாங்கிப் படிக்கலானான்.
அந்த கையெழுத்தைப் பார்க்கும்போதே அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. இது தனது குலத்தையே ஒழித்த கொடும் பாவியினுடைய கையெழுத்து என்பது தெட்டென விளங்கி விட்டது. உடனே அங்கு வந்தவள் அந்த சண்டாளி தான் என்று நன்கு தெரிந்துகொண்டான். அவ்வாறு தெரிந்துகொண்டதும் அவன் மனத்தில் பழய எண்ணங்கள் ஒன்றன்பின்னே ஒன்று தோன்றின. குணவதியின் சாந்தமான முகம் கண்முன்பு அப்படியே கண்ணீர் வடிய நிற்பதுபோன்றும், உடனே நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதுபோன்றும், அடுத்த நிமிடம் தன்னைக் கெஞ்சுவதுபோ லும், மறு வினாடி சவக்கோலமாகச் சென்றதும் மாறி மாறி சினிமாப் படம்போலத் தெரிந்தன.
-----
அவ்வாறு தோன்றிய தோற்றத்தினால் தன்னை மறந்து "ஹா!" என்று கதறிக்கொண்டு தன்னிரு கைகளால் கண்களை மூடிக் கொண்டு கண்ணீரை ஓடவிட்டான். அருகிலிருந்த பரிமளாவிற்கும் கேசவனுக்கும் விஷயம் இன்னதென்று விளங்காது இருவரும் தவித்தவாறு, "பெரியவரே! போஷகரே! ஏன் இக்கடிதங் கண்ட தும் முகம் மாறுபட்டதோடு புலம்புகின்றீர்கள்? இக்கடிதத்திற்கும் உமக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது?" என்று கேட்டு அவரையே உற்றுநோக்கியபடி நின்றார்கள்.
சற்று சமாதானமடைந்த பொன்னுசாமி இருவரையும் தன்னிரு கரங்களினாலும் இழுத்துத் தன் பக்கலில் அமர்த்திக்கொண்டே கடிதத்தைப் படித்து முடித்தார். வாய் பேசாது தேம்பித் தேம்பிப் புலம்பினார். "என் கண்மணிகளே! மறைந்து கிடந்த நாற்றக் குப்பை திடீரென்று துர்மணத்துடன் கிளம்பி உங்கள் நாசியில் புகுந்துவிட்டது. கேசவா! நீயும் அத் துர்மணத்தைப் பார்த்துவிடு. இதோ இக்கடிதத்தைப் படி" என்றான். உடனே கேசவன் கடிதத்தைப் படித்தான். அடங்காத