(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

   

--------

   

குடும்பங்கள் அநந்தம். என்னுடைய துராசையினாலும், சிற்றின்பப் பித்தினாலும், நான் என்கிற மமதையினாலும் உலகத்தையும் கடவுளையும் பாப புண்ணியத்தையும் அடியோடு மறந்து இறுமாந்திருந்ததனால் எனது ஏழேழு ஜென்மத்திற்கும் இழுக்கு தேடிக் கொண்டேன். என்னால் குடி முழுகிய ஜாபிதாவில் உனது எஜமானராயும், தற்போது தர்ம கர்த்தாவாக விளங்குபவருமான பொன்னுசாமி என்பவரும் ஒருவராவர். பரிமளா! இந்த வரியைப் படிக்கும்போது நீ திடுக்கிடுவாய்! அது இயற்கையே! பொன்னுசாமி என்பவரை அடியோடு பாழாக்கி அவர் குடும்பத்தையும், தர்ம பத்தினியையும், செல்வத்தையும் உயிருடன் உரிஞ்சிய பூதம் நானே யாவேன். பணப் பேராசையினால் அவர் நேர் முகமாகக் கொடுத்த பணம் போதாமல், அவர் பெற்றோரில்லாத சமயம் எனது கையாட்களை விட்டு அவர் வீட்டில் கொள்ளையடிக்கச் செய்தேன். அவர் தன்னுடைய மனைவியின் முகம் பார்க்கா வண்ணம் மாயை வலையை வீசி மறைத்தேன். அவரை விடச் செல்வவந்தர்களின் தொடர்பு கொண்டு அவருக் குத்துரோகம் பலவும் செய்தேன். ரத்தின வியாபாரியின் ரத்தினங்களை ஒரேயடியாகக் கொள்ளையிடும் நோக்கத்தில் அவருக்கு விஷத்தைக் கொடுத்து கொலையும் செய்தேன். ஐயோ!.... இந்த ஆபாஸங்களை -ஊழல்களை எல்லாம் சொல்லி உன் மனத் திற்கு வெறுப்பு உண்டாக்க நான் சம்மதிக்கவில்லை. நான் செய்த அக்ரமங்களெல்லாம் எனக்குச் செய்யும்போது தெரியாவிடினும் பிறகு தெரிவதற்கு ஓர் காலமும் நேர்ந்தது.

   

அக் காலம் முதல் என் மனமே என்னை இடித்து இம்சை யுறுத்தியது. நான் கண் காணாது மறைந்தேன். நான் கொள்ளையடித்ததுபோல என் வீட்டில் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்தார்கள். என்னுடைய அருமைக் குழந்தைகளில் ஒன்று மோட்டாரில் நசுங்கி உயிர் நீத்தது.

   

-------

   

மற்றொன்று எனது பகைவன் கரத்தால் கொல்லப்பட்டது. மற்றொன்று நான் வேறு ஒருவனை எமனுலகமனுப்புதற்கு வைத்திருந்த விஷங்கலந்த பாலைக் குடித்து இறந்தது. இவ்விதம் என் கதியும் செய்கையும் கடவுள் அதோகதியாகச் செய்த பிறகே எனக்குப் புத்தி பிறந்தது. கண் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.