(Reading time: 22 - 44 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

சத்யம். நீங்கள் வருந்தவோ, வித்யாசமாக சம்சயிக்கவோவேண்டாம். இந்த சம்பவத்தை நீங்கள் இப்போதே மறந்துவிடுங்கள். அந்த அம்மாளும் எவ்வளவோ மனம் வெறுத்து நொந்திருப்பதாக இக்கடிதம் காட்டுகிறது. இனி அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம். மேலே யாகவேண்டிய காரியத்தைக் கவனி யுங்கள். பொழுதுபோய்விட்டது. படுத்துக்கொள்ளுங்கள்." என்று வெகு உருக்கமாகக் கூறினார்கள்.

   

--------

   

இதுகேட்ட பொன்னுசாமி "என் செல்வங்களே! உங்களுடைய மேன்மையான புத்தியின் விசேஷத்தினால் இவ்விதம் என் மீது வெறுப்பு கொள்ளவில்லை. எனினும் என் மனமே என்னை வெறுக்காத நிமிடமில்லை. என்னுடைய பாபங்களை நினைத்துப் பார்த்தால் என்னை அன்புடன் ஈன்றெடுத்து, ஆயிரம் பாடுபாட்டு வளர்த்த அன்னை, பிதாவின் அன்பை மதியாது அவர்களைக் கொலை செய்த பெருந்துக்கத்தையும், என்னையே நம்பி இருந்து என் முகம் பார்ப்பதற்கும் ஏங்கிய உத்தமியான குணவதியைக் கொலை செய்த சண்டாளத் தன்மையையும் நினைத்தால் என் அங்கமே நடுநடுங்குகின் றது. இரவுபகல் சதா என்னுடைய இதயத்தில் ஓர் அம்புகுத்துவது போல குத்திக்கொண்டே இருக்கின்றது. எந்த காலத்திலும் நான் செய்திருக்கும் அக்கிரமத்திற்குக் கடவுளினிடம் தக்க தண்டனை படையாமலிருக்க முடியாது. அந்த நாளை எதிர்நோக்கிக்கொண்டுதா னிருக்கிறேன். குணவதியின் திவ்ய முகத்தை நான் ஒருபோதும் நேரில் நோக்கியறியேன். சாந்தமாக ஒரு வார்த்தைகூடப் பதில் பேசியறியேன்.

   

--------

   

என் கரத்தால் தாலியைக் கட்டிய தோஷத்திற்காக அக்கரத்தினால் அவளை என்னறிவு அழிந்து வேண்டிய வரையில் நையப் புடைத்தேன். அந்த உத்தமியின் அழகிய கரத்தினால் என் காலைப் பிடித்து நலங்கிட்டதற்குப் பதிலாக காலினாலேயே உதைத்தது போதாமல் அந்தப் புண்யவதிபின் உயிர் போகும் தறுவாயிலும் காலினால் உதைத்துத் தள்ளினேன். அந்தோ! அதை நினைத்தால் என் மனம் இப்போதும் நடுங்குகின்றது. அவ்வுத்தமியை ஒருபோதேனும் நான் இன்பமாக அழைத்து ஒரு வார்த்தை பேசாவிடினும் அடித்து உதைத்துத் திட்டியது எனது ஏழேழு ஜன்மாவிற்குந் தாங்கும். அவளுடைய பிணத்தைப் பார்த்தபிறகுதான் எனக்குக் குணம் திரும்பியது. அவளுடைய மணம் எனக்கு வீசியது. அக்கினி பகவானுக்கு இரையாக்கக்கூடிய சவத்தை என்ன செய்வது?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.