ஆபத் ரக்ஷகா ! இந்த சர்ப்பத்தின் சீற்றம் எனக்கு மிக்க பயத்தை உண்டு பண்ணுகிறதே! நீ ஓர் மடுவில் சர்ப்பத்தை கையில் எடுத்து ஆட்டியதாக என் திண்ணைப் பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்லிக் கேட்டிருக்கிறேனே! அத்தகைய சர்ப்பத்தை நீ இப்போது புற்றுக்குள்ளனுப்பி விடுவது கஷ்டமா! உன்னால் ஆகாத காரியமும் உலகில் உண்டா!
("ஐயா பழனிமலை வேலா' மெட்டு)
1. ஐயா! ஏழுமலையின் வாலா! எனைக்காத்திடுவாய் சர்வேசா!
உய்யும் வழி உன்னருளன்றோ! இதை உனக்கறிவித்தல் நன்றோ-
2. வையம் அளந்த திருபாதா! பையவே வரலாகாதா!
ஐயனே என்மேல் வாதா! இது அருளோ அறைவாய் நீதா!-
3. பீதாம்பர துளஸி ஹாரா! பேராதரிக்கும் ஒய்யாரா!
சாதக அசுர சம்ஹாரா! ஜெய கல்யாண சேஷகிரி வீரா-ஐ
என்ற பாடலைப் பாடிக்கொண்டே பகவானைத் தோத்திரஞ் செய்து நின்றான்.
--------
இரவு ஏற ஏற பயங்கரம் அதிகரித்து விட்டது. மரத்தின் கீழே அனேக புத்துகள் இருப்பதாக அவன் காலுக்குத் தெரிந்ததும் மாத்தின் மேலே ஏறிக்கொண்டான், "ஹா! என் தாயே! உன் வார்த்தையை மதியாததின் பலன் இது. எங்கு அலைந்தும் உன்னைக் காணாமல் கலங்கிய நான் அந்த குகையிலிருக்கும் மகானின் தரிசனத்தினாலும் உத்தம வாக்கின் பலனாலும் உன்னைக் கண்டு களிக்க லாமென்று நான் கிளம்பி விட்டேன்! என்னுயிர் இடை வழியே சென்றாலும் சரி; அன்றி நான் எக்கதியானாலும் சரி. உன்னைக் காணும் வழியை அடைகிறேன். அம்மா! அம்மா!..ஹா! என் தாயை நான் காண்பதற்கு, அந்த மாயவனின் தாளை