(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

எழுதினேன். அவர் சிலரை அனுப்பினார். அவர்களில் இவரும் ஒருவர். "நான் ஒரு கதை வெகு ருசிகரமாக எழுதி இருக்கிறேன்! அதை நடிக்க வேண்டும்" என்று கேட்டார். சரி, என்று இசைந்து இப்போது நடிக்கின்றோம். ஏனம்மா! எதற்காகக் கேட்டீர்கள்?

   

-----------

   

பாலா:- எதற்கு மில்லை; கதை வெகு ருசியாகவும், ஸ்வாரஸ்ய மாகவும் இருக்கிறதே! இத்தகைய கதையை யார் எழுதினார்கள் என்கிற ஆச்சரியத்தினால் கேட்டேன். நாங்கள் அவரை நேரில் பார்க்கலாமா! இந்த கதைக்கு முடிவு இன்னும் ஏற்பட்டிருக்காதென்று நினைக்கின்றேன்! ஆகையினால் எனக்கு ஓர் அருமையான கற்பனை தோன்றுகின்றது. அதை அவரிடம் தெரிவித்து முடிவு செய்விக்க நினைக்கிறேன். எங்களால்தான் முடிவும் நடக்கவேண்டும்." என்றாள்.

   

இதைக் கேட்ட மானேஜருக்குச் சிறிது சந்தேகம் உண்டாகி யது. அதை வெளியிடாது "சரி; அதற்கென்ன! தாராளமாய்ப் பார்க்கலாம்" என்றார். உடனே நீலா, பாலா, கோமதி மூவரும் எஜமானரோடு சென்றார்கள். அப்போது மருதப்பா கடவுளின் படத்திற்கு எதிரில் மண்டியிட்டு வணங்கியவாறு, “ஹா! கடவுளே! தேவாதி தேவா! என் அன்னையை நான் காணாமலேதான் உயிர் விடுவேனோ! என்னருமை உடன்பிறந்தோரைப் பார்க்காத பாவியாவேனே! என்னுடைய சரிதையை இன்று நடித்ததும் என்னைத் தாங்காத துக்கம் வந்து விட்டதே! நானாக வேண்டுமென்று இழந்து விட்ட என் வானிதியங்களை எங்கு தேடுவேன்! இனி என்று அடைவேன்?" என்று கண்ணீரை ஆறாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்தான். அது வரையில் பொறுமையாயிருந்த கோமதி அதற்குமேல் இழந்து “ஹா! என் செல்வா! மருதப்பா! மருதப்பா! இதோ நான் வந்து விட்டேனடா! கண்மணி” என்று அவன் கனவிலும் கருதாதவாறு அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். நீலாவும், பாலாவும், 'அண்ணா!' என்று ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். இந்த அற்புதமான காட்சியைக் கண்ட எல்லோரும் வியப்பே வடிவமாக நின்றார்கள்.

   

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

----------

   

   

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.