(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

போக்கலாகாது.' என்று அனேக நற்புத்திகளைப் போதிப்பதோடு தன்னுடைய சரிதையை அவர்களுக்கு ஓர் கதை போலச் சொல்லி ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கச் செய்வான். இவன் பெரிய தடியனாக விருந்து கொண்டு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பதனால் எல்லாப் பிள்ளைகளும் அவனைப் பரிகஸிப்பார்கள். எனினும் அவன் நல்லவிதமாக புத்தி புகட்டிக் கதை சொல்லுவதால் அவனைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

   

---------

   

அவன் தினம் சில வீடுகளில் தண்ணீர் தூக்கிக் கொடுப்பது, துணி துவைப்பது, முதலிய வேலைகளைச் செய்து ஒவ்வொரு வேளை ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டுக் காலத்தைத் தள்ளியவாறு நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டான். தன் தாயையும் சகோதர சகோதரிகளையும் எங்கு தேடியும் தகவலே கிடைக்காது வருந்தி மெலிந்து விட்டான். ஒரே இடத்தில் இருந்தால் எவ்விதம் அவர் களைத் தேடுவது என்ற எண்ணம் உதித்ததால் ஊர் ஊராகத் தேடத் தீர்மானித்து அவ்விதமே சுற்றி அலைய வாரம்பித்தான். எங்கு சென்றாலும் ஒருவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

   

மனம் முறிந்து விரக்தி மேவிட்டு விடுகின்றது. எந்த ஊருக்குச் சென்றாலும் தன்னாலான உதவியைப் பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற தீவிரமான எண்ணம் உண்டாகிவிட்டதால் ஏழைகள் அனேகர் தொழில் செய்வதைக் கண்டு அதில் மிக்க வயதானவர்கள், கர்ப்பிணிகள், அங்கஹீனர்கள் முதலியவர்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்வதும், அவர்களோடு உண்டு அன்று பொழுதைப் போக்குவதுமாக இவ்விதம் பல ஊர்களில் சுற்றி அலைந்து சில வருடங்களைக் கழித்தான்.

   

ஒரு தினம் ஒரு மலைப் பிரதேசத்திற்கு வருகிறான். அங்கு மலைமீது பெரிய ஒரு குகையும் அக் குகைக்குள் ஒரு கோயிலும் இருப்பதாகவும் அக் கோயிலுக்குள் ஒரு சாமியார் இருக்கிறார். அவர் ஜோஸியம் சொல்கிறார்; யார் அந்த மலையில் தைரியமாக ஏறி குகைக்குள் பயமின்றி சாமர்த்தியசாலியாக வருகிறார்களோ அவர்களுக்குச் சாமியார் பூர்ணமாக அனுக்ரகம் செய்து ஜோஸியமும் சொல்லி யனுப்புகிறாராம்; ஆனால் அவ்விதம் யாரும் நடந்தது கிடையாது. இத்தனை வருஷத்திற்காக இரண்டொருவரே தான் சென்று திரும்பியதாகக் கேள்வி. மற்ற அனேகர் இடையிலேயே மலை ஏற முடியாமலும், ஆகார வசதி இல்லாமலும், மழை, வெய்யில், இரவு, இருட்டு, மிருக பயம் முதலிய அனேக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.