(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

கஷ்டங்களினால் முற்றும் ஏறமாட்டாது திரும்பி விட்டதாயும், சிலர் இறந்து விட்ட தாயும், சிலர் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகி விட்டதாயும் பலர் சொல்லக் கேட்டான்.

   

------------

   

அதைக் கேட்டதும் அவன் "எது எப்படியாவது இருக்கட் டும். மலையின் உச்சிக்குச் சென்று சாமியாரைப் பார்க்காமல் வருவதில்லை.” என்ற வைராக்கியங் கொண்டு மலையில் ஏறுகிறான். அப்போது மலைப் பக்கம் போவோர் வருவோர்கள் "ஐயா போகாதே! போகாதே!" என்று தடுத்து பயமுறுத்துகின்றார்கள். அதையும் கவனியாது சிறிது தூரம் ஏறுகையில் சினிமாப் படம் பிடிப் பவர்கள் அம்மலையில் சில முக்கியமான சீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவன் தைரியமாய் ஏறி வருவதைப் பார்த்து, 'நீ யார்! எங்கே மேலே ஏறிப் போகிறாய்?' என்கி றார்கள். அவன் தான் போகும் காரணத்தைக் கூறிவிட்டு மீண்டும் ஏறுகிறான்.

   

சினிமாக்காரர்கள் அவனைத் தடுத்துக் கூறியும் கேளாது பின் னும் ஏறுகிறான். இரவு சமீபித்து விட்டது. துஷ்ட மிருகங்களின் ஆரவாரம் இவனுக்கு அதிக பயங்கரமாக இருக்கின்றது. எந்த திக்கை நோக்கினும் கர்ஜனையே கேட்கின்றது. நாய், நரி முதலியவைகளின் ஊளை பிடுதலும், குரைப்பதும், இன்னு மற்ற மிருகங்களின் தொனிகளும் கேட்கக் கேட்க மார்பு படபடவென்று துடிக்கின்றது. தலை சுழலுகின்றது. அந்த மிருகங்களெல்லாம் இவனைத் தூரத்திக்கொண்டு வருவதாகவே மனத்தில் பீதி உண்டாகின்றது அப்பீதியினால் கால்கள் நடக்கமாட்டாது தத்தளிக்கின்றன.நடுக்கலுற்று விவிலத்துப் போய்விட்டன. உடனே அவன் அம்மலை மேலிருந்த ஓர் மரத்தடியில் உட்காருகிறான்.

   

--------

   

அவ்வாறு உட்கார்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெரிய சர்ப்ப த்வனி 'புஸ்' என்று கிளம்புகின்றது. அந்தோ! அந்த ஓசை பைக் கேட்டு மிரண்டு எழுந்து விலகி நிற்கிறான். இருளோ கப்பிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்தில் சிறு சிறு நக்ஷத்திரங்களே ஆங்காங்கு காணப் படுகின்றனவே யன்றி வேறு விதமான பிரகாசம் எதுவுமே இல்லை. இத்தகைய பயத்தோடு அவன் "ஏ கருணா நிதே! காருண்ய மூர்த்தே! உன்னையன்றி வேறு துணையில்லை. ஐயனே! 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.