அவனும் "நான் இனி சத்தியமாக இவ்வித காரியத்தைச் செய்வதில்லை. இனி இப் பக்கமே நான் ஜென்மத்திற்கும் வருவ தில்லை." என்று கூறிவிட்டு வெளியே வருகிறான்.
அவன் விடுதலையாகி வெளியே வந்த உடனே தன் வீட்டை நோக்கி ஓடுகிறான். "அம்மா! அம்மா!" என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைகிறான். அவன் முதல் தரம் திருடிச் சிறைக்குச் சென்ற அன்றே வீட்டை விட்டு விலக்கப்பட்ட கோமதியின் செய்தி இப்போது அவனுக்கு என்ன தெரியும்? ஆதலால் அங்கு ஓடி அவளை அழைக்கின்றான். இவன் திருட்டு மதி மாறித் திருந்தியவன் என்பதை அறியாத வீட்டுக்காரர்கள் "சீச்சி! கே-டீ! வீட்டிற் குள்ளே வராதே! உன்னுடைய அம்மாளை அன்றே விலக்கி விட் டோம். நீ இங்கு நிற்காதே; ஓடிப்போ! அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளலாம் என்று வருகிறாயோ ஓடு பயலே!" என்று கடிந்து கூறுகிறார்கள்.
---------
இது கேட்ட பையன் வெகு தாழ்மையோடு "அம்மா! நான் என் புத்தி பிசகினால் தப்பிதம் செய்து விட்டேன்; திருடி விட் டேன். இப்போது என் புத்தி சரியாகி விட்டது. இனி நான் எந்தப் பொருளைக் கண்டாலும் செத்த பிணத்திற்கு ஒப்பாக நினைப்பேன். இது சத்தியம். என் மேல் சந்தேகப் படவேண்டாம். என் தாயார் எங்கே! என்னருமை கேசவனும் சகோதரிகளும் எங்கே? அவர்களை எங்கே அனுப்பினீர்கள்? அவர்கள் வேறு எந்த வீட்டிலிருக்கி? தயவு செய்து அதைக் கூறுங்கள் " என்று கெஞ்சிக் கேட்கிறான்.
இவன் வார்த்தையைச் சிறிதும் நம்பாத வீட்டுக்காரர்கள் "போடா திருட்டுப் பயலே! உன் அம்மாளை நாங்கள் அனுப்பிய பிறகு பார்க்கவே இல்லை. அவர்கள் எங்கு சென்றார்களோ! எக்கதி யானார்களோ? எங்களுக்குத் தெரியாது, நீ முதலில் வெளியே போ!" என்று தூரத்தி விடுகிறார்கள். அவ்வளவு தான் அவன் மனம் முறிந்து விடுகின்றது. 'அம்மா! அம்மா! உன்னைப் பார்க்க எண்ணிப் பேராவல் கொண்டுவந்த எண்ணமெல்லாம் மண்ணாகி விட்டதே! ஹா! உன்னை நான் இனி எங்கு தேடுவேன்! கேசவனையும், நீலா, பாலாவையும் எங்கு காண்பேன்! என் தாயே! அருமைத் தாயே! ஆருயிர்த் தாயே! என் இன்பத் தாவே! இணையிலா சகோதரிகளே! ஈடில்லாக் கேசவா!' என்று புலம்பிக் கொண்டே அலைந்தான்; திரிந் தான். எங்கெங்கோ விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை. அவன் தெரிந்தவர்கள் வீட்டிற்குச்