(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

அனுபவித்தறியவில்லை. ஏதோ சாதாரணமான வேலையைச் செய்து வந்தான். ஆதலால் அவனுக்கு இப் போதுதான் சிறையில் படும் துன்பம் நன்றாகத் தெரியலாயிற்று. இயந்திரக் கல்லைப் பிடித்து ஒரு தினம் மாவு அரைக்கையில் அவ னால் தாங்க முடியாமல் கோவெனக் கதறியழுது "ஹா! கடவுளே! நீ ஒருவன் இருக்கின்றாய் என்பதை இதுகாறும் தெரியாத பாவியாகி விட்டேனே! என் தாயே! குண பூஷணமே! பொறுமையில் சிறந்த புனிதவதியே! உன்னுடைய பொன்னுரையைக் கேளாது மூர்க்கனாய்த் திரிந்து அஷ்ட சகவாசம் செய்து துன்மார்க்கனாகி விட்டேனே! ஆ! என் அன்னையே! என் வினையன்றோ உன்னை மதியாது எதிர்த்துப் போராடும்படியாகச் செய்தது!” என்று கதறுகின்றான்.

   

இந்த பாகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் கோமதி யின் மனம் துக்கத்தினால் பொங்கி "ஆ! என் கண்ணே! மருதப்பா!" என்று கத்தக் கூடிய நிலைமைக்கு அவள் வந்து விட்டாள். இதையறிந்த பாலா "அம்மா! நாம் இங்கு இதை கவனிப்பதை அவன் அறிந்தால் மனம் முறிந்து வெட்கத்தினாலும் துக்கத்தினாலும் துன்பப்படுவான். ஆதலால் நாம் இருப்பதை இப்போது காட்டிக் கொள்ளக் கூடாது. மேலும் இவ் விஷயத்தை எல்லாம் நாம் அறிய வேண்டியது கடமையல்லவா! அவன் வெறுமனே வாயினால் சொல்லக்கேட்டு அறிவதைவிட இவ்விதம் பார்ப்பது நல்லது. இந்தக் கதையை பகிரங்கமாக நடிக்கையில் இதைப் பார்க்கும் இவனைப் போன்ற ஆசாமிகளும் துன்மார்க்கத்திலிறங்காமலும் ஈடுபடாமலும் இருக்கலாம்; இறங்கியவர்களும் திருந்தலாம். நாம் இப்போது சற்று பொறுமையை வகித்தோமானால் மற்றையோருக்குப் பெரும் உபகாரத்தைச் செய்தவர்களாவோம். மேலும் இப்போது அவன் நடிக்கின்றானே யொழிய உண்மையில் கஷ்டப்படவில்லையம்மா ! இதை முதலில் கவனி. அண்ணா! இப்போது நம்மைப்போல எதேச்சாதிகாரமாகத் தானிருக்கிறான். ஆகையினால் சற்று நிதானி." என்று தேற்றினாள். பிறகு கோமதியும் சற்று பொறுமையோடு அமர்ந்தாள்.

   

-------

   

பிறகு மாவு அரைக்கும் மனிதன் தன்னால் கேழ்வரகு அரைக்க முடியாமல் தத்தளிக்கின்றான். அதிகாரிகள் கொடுத்த நேரம் கடந்து விடுவதால் அதிகாரி சவுக்கு கொண்டு வந்து "ஏ கொலைகாரப் பாவியே! இன்னும் மாவு அரைக்கவில்லையா! இத்தனை நேரம் என்ன செய்தாய்! ஏன் அரைக்கவில்லை?" என்று கூறிக் கொண்டே சுளீர் சுளீர், என்று அடிக்கின்றான். அவன் அந்த அடியின் வேகத்தைத் தாங்காது "ஆ! கடவுளே! கடவுளே! எனக்கு இன யாவது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.