(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

கேட்கிறான். அங்கிருப்பவன் "ஆமாம். ஆமாம்." என்று பதில் சொல்கிறான். அந்த பையன் எதிரிலிருக்கும் ஒரு குழந்தை "இவன்தான் என் காப்பைக் கழட்டியது" என்று சொல்கிறது.

   

இந்த சம்பவத்தைக் கண்ட்கோமதிக்கு தன் மகன் ஆதியில் காப்புத் திருடிய சம்பவம் நினைவிற்கு வந்து துக்கம் பொங்கிவிட் டது. அதே சம்பவம் இங்கு நிகழ்வதாகவே தோன்றியது. தன் துயரத்தை அடக்கிக்கொண்டு பின்னும் கவனிக்கையில் ஓர் பெண்மணி மெல்ல நடந்து வருகிறாள். அவள் அந்த சம்பவத்தைக் கண்ட தும் அலறுகிறாள். அந்தப் பையன் "அம்மா! நான் இனிமேல் திருடவில்லை. அம்மா!" என்று அழுகின்றது. ஆனால் போலீஸ் காரன் பையனைப் பிடித்துக்கொண்டு போகிறான். உடனே அந்த வீட்டுக்காரர்கள். சகல தட்டுமுட்டு சாமான்களையும் வீதியில் எடுத்து எறிந்துவிடுகிறார்கள். அந்தப் பையனின் தாயார். புலம்பியபடியே இரு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அழுதுகொண்டே வெளியே போகிறாள்.

   

----

இந்த இடத்தைப் பார்த்ததும் கோமதிக்கு இது தன்னுடைய கதைதான் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது. அதற்குமேல் அவள் துக்கம் தாங்க முடியவில்லை. இடையில் தான் சென்று ஏதே னும் கேட்டால் தனது உருவமும் அப்புகைப் படத்தில் விழுந்து விடுமாகையினால் இன்னும் என்ன நடக்கின்றது பார்க்கலாம் என்று பொறுமையாக உட்கார்ந்திருந்தாள்.

   

போலீஸ்காரன் அழைத்துச்சென்ற பையனை நன்றாக உதைக்கின்றார்கள்; ஜெயிலில் போட்டு விடுகின்றார்கள். சில வருடங்கள் கழித்துப் பையன் விடுதலையடைகிறான். விடுதலை யடைந்ததாகக் கதையில் வரும் போது முன் நடித்த பையனின்றி வேறு ஒருவன் நடிக்கின்றான். அவனைப் பார்த்தவுடனே கோமதிக்கு திடுக்கிட்டது. அப்போது நீலா, "அம்மா! இவனைத்தான் நான் சொன்னேன். இவன் முகத்தைப் பாரு. அக்கா! இவன் முகத்தைப் பாரு. இவன் நமது தாயாரின் ஜாடையாகவே இருக்கின்றான் பாரு." என்று காட்டினாள்.

   

பாலாவும் கோமதியும் உற்று நோக்கி "ஆம்; ஆம். இவன் கேசவனல்ல! இவன் மருதப்பாவைப் போலிருக்கின்றது, "ஹா! மருதப்பன்தான் மருதப்பன் தான் " என்று தம்மை மீறி பேசிக் கொண்டார்கள். இதற்குள் நீலா "அம்மா! இவன் பெரிய அண்ணனா, சிறிய அண்ணனா?" என்றாள். அதற்கு கோமதி "அம்மா! இவன் தான் பெரிய அண்ணன். இவனை நான் சென்று 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.