முன்பு கொண்டு நிறுத்துகிறேன். இதுவிஷயத்தில் நானே ஆண் பிள்ளைகளைப் போலத் துணிகரமாக வேலை செய்கிறேன். நீ பயப் படாதே!" என்று தேறுதல் கூறினாள்.
-----------
பிறகு தினந்தோறும் பாலா அந்தப் படக்காரர்களைச் சந்திக்கும் நோக்கத்துடனேயே வேலை செய்ய வாரம்பித்தாள். தன்னுடைய வேலையையும் கவனிப்பதோடு, தினந்தோறும் வீதி வீதி யாக அலைவது ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று பார்ப்பது இவ்விதமே சில நாட்கள் கஷ்டப்பட்டாள். ஒன்றும் புலன் கிடைக்க வில்லை. அதுவே கவலைகொண்டு சில மாதங்களைக் கடத்தினாள்.
கங்காதரன் வீட்டை விட்டு அசையவில்லை. சதா பெண் வேடத்திற்குள்ளேயே மறைந்திருந்தான். ஒரு தினம் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகையில் அன்று வந்த சினிமாவின் முதலாளி எதிரில் சந்தித்தான். உடனே அம்மனிதன் வெகு வணக்கத்தோடு, மரியாதையாய் "அம்மா! வந்தனம். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கிறதா!" என்று கேட்டான்.
உண்மையில் அவனைப் பார்த்துச் சிலகால மாகிவிட்டதால் அவளுக்கு நினைவு முதலில் இல்லை எனினும் உற்றுப் பார்த்தவளவில் நன்றாக ஞாபகம் வந்துவிட்டது. பிறகு "ஒகோ! தாங்களா! எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றதே! தாங்கள் படக்காட்சியின் எஜமானரல்லவா! பேஷ்! அன்றைய தினம் நான் உண்மையில் நடு நடுங்கிவிட்டேன்! பிறகு தங்களைக் காண்பதற்கே இல்லாதுபோய் விட்டது. கம்பெனி எப்படி நடக்கின்றது. எத்தனை நாடகங்கள் நடித்தாயிற்று?" என்று சாதாரணமாக விசாரித்தான்.
எஜமானன்.-பிறகு ஐந்து நாடகங்கள் தயாராகிவிட்டன. சினிமாப் படம் தயாரிக்கையில் உங்களுக்கு டிக்கட்டு அனுப்புகி றேன். நீங்கள் பார்ப்பதற்கு வாருங்கள். நாங்கள் இப்படம் எடுப்பதற்காக காடுமேடுகள் எல்லாம் திரிந்துகொண்டிருக்கிறோம். ஆதலால் தான் தங்களைப் பார்க்க முடியவில்லை.
-------
பாலா:- ஒ! அப்படியா! நானும் என் சகோதரியும் உங்கள் கம்பெனியின் நடிப்பைப் பார்ப்பதற்கு ஆவல்கொண்டோம். ஆனால் எங்கே நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதே எங்களுக்குத் தெரியா