தாகையினால் சந்திக்கக்கூடவில்லை. மற்றொரு சமயம் பார்ப்பதற்குக் கூடுமானால்,
எஜமானன்;- ஏன் அப்படி கூடுமானால் என்கிறீர்கள். இப்போது ஒரு ரஸமான நாவல் வெகு அழகாக இருக்கின்றது. எங்கள் கம்பெனியில் உள்ள ஒரு நடிகன் தானே எழுதி நடித்து எடுக்கப்படுகிறது. அது நாளை நடிக்கப்படும். அதற்கான இடங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதைத் தாங்கள் பார்ப்பதாயின் நாளைக் காலையில் வரலாம். இதோ விலாசம்.
பாலா.- நாவல் எழுதக்கூடிய திறமையுள்ளவர்களே உங்களுக்கு நடிகராக இருப்பது மிக்க சிலாக்கியமானதல்லவா! அவர் யார்? அவருடைய பெயரென்ன!
எஜமானன்.- அவர் பெயர் சுப்பிரமணியனாம், வெகு நல்லவர். வெகு நல்ல மாதிரி தரிங்கள் நாளை வந்தால் அந்தக் கதையில் அவரே நடிப்பார்; பார்க்கலாம்.- என்றான். "சரி நாங்கள் வருகிறோம்" என்று கூறி உத்தரவு பெற்றுக்கொண்டு பாலா வீடு சென்றாள். இங்கு நடந்த விஷயங்களை பாலா தன் பெற்றோருக்குக் கூறினாள்.
இது கேட்ட பெற்றோரும் நீலாவும் சந்தோஷப்பட்டு அன்று காலை நேரத்தை எதிர்பார்த்துக் கொணடிருந்தார்கள். அழகான காலை நேரம் வந்தது. பாலா, நீலா, கோமதி மூவருமட்டும் ஓர் வண்டி யமர்த்திக்கொண்டு கடிதத்தில் கண்ட விலாசத்திற்குச் சென்றார்கள். கோமதியின் தேக நிலைமை வெகு கேவலமாக விருக்கிறதெனினும் இங்கு ஒருகால் தன் புத்திரனைக் காணக் கிடைக்குமோ என்று எதிர்பார்க்கும் ஓர் வாஞ்சையினால் அதைக் கவனியாது புறப்பட்டாள். 'அன்பு செய்யாத காரியம் அவனியில் உண்டா?"
-------
இவர்களைக் கண்டதும் எஜமானர் வெகு மரியாதையாக வரவேற்று உட்காரச் செய்தார். இக்கதையின் முதல் சில பாகங்கள் ஏற்கெனவே நடந்துவிட்டதால், விட்ட இடத்திலிருந்து நடிக்க ஆரம்பமாயிற்று. அன்று ஆரம்பக் கதையில்,- ஒரு வீட்டு வாசலில் அனேகக் கூட்டம் நிறைந்திருக்கின்றது. அப்போது அக்கூட்டத்து மத்தியில் ஒரு பையன் அழுதுகொண்டு நிற்கிறான். போலீஸ்காரன் பையனைப் பிடித்துக் கொண்டு "இப் பையனா திருடினான்?" என்று