(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

தத்தணிக்கும்? அடடா! இந்த யோசளை எனக்கு திடீரென்று உண்டானதற்குக் காரணம் யாதாக இருக் கும்?" என்று வெகு நேரம் யோசிக்கின்றான். திருடிய நகைகளை எல்லாம் ஒரு முறை பார்க்கிறான். திருட்டு ஆசையினால் அவைகள் மிக்க அழகாக விளங்குகின்றன. குழந்தையின் முகத்தைப் பார்க்கிறான். அவனை பறியாத விதமான உணர்ச்சி ஒன்று போராடுகின் றது. அவ் வுணர்ச்சிக்குக் காரணம் அவனுக்கே தெரியவில்லை. இவ் விதமான யோசனையுடன் சற்று நேரம் குழம்பிக் கொண்டே இருக்கையில் அவ் வழியாகச் சென்ற ஒரு பீட் சேவகன் இங்கு இவன் குழந்தையையும், நகையையும் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து விடுகிறான்.

   

-------

   

அவ்வாறு பார்த்ததும் இவன் பழய கே-டி என்று தெரிந்து விடுகின்றது. உடனே அங்கு ஓடோடி வந்து இவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "அடேய் திருட்டுப் பயலே! நீ இதுபரியந்தம் பலதரம் ஜெயிலிலிருந்தது போதாதென்று இப்போதும் உன் பழக்கத்தை விடாது ஆரம்பித்ததோடு குழந்தையைக் கிணற்றிலுமா போட்டுக் கொலை செய்யப் போகிறாய்!" என்று கூறி அவனை பலமாகப் பட்டார் பட்டார் என்று அடித்து " அடேப் திருட்டு நாயே! உன்னுடைய திருட்டுப் புத்தி உன்னை விட்டுப் போகவில்லையா !" என்று கூறிக் கொண்டு அவனை இழுத்துக் கொண்டு குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறான். அங்கு குழந்தை யாருடையதென்று விசாரித்து அதற்குரித்தான வர்களையும் வரவழைத்து வழக்கு விசாரணை செய்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற குற்றத்தில் அவனுக்குத் தண்டனை விதிக்கிறார்கள்.

   

---------

அப்போது அவன் எதுவுமே வாய் திறவாது பிரமித்து கிலி பிடித்து விடுகிறான். தான் பெருங் கொலைசெய்ய எண்ணிய தப்பித்தத்தை எண்ணித் திடுக்கிட்டு பெருமூச்செறிகின்றான். அப்போது அவன் தாயை எண்ணிப் புலம்புகிறான். பிறகு அவனை சிறைச் சாலையிலடைத்து விலங்குமிட்டு விடுகிறார்கள். அவ்விதம் சிறைச் சாலையிலிருக்கையில் அவனுக்கு மாவு அரைத்தல், செக்கு இழுத் தல், கவலையில் தண்ணீர் பாய்ச்சல், நெல்லு குத்தல் முதலிய பல வேலைகளைச் செய்யும்படியாக தண்டனை விதிக்கின்றார்கள்.

   

இதற்கு முன்பு அவன் சிறைச்சாலையிலிருக்கையில் இத் தகைய தண்டனை எதுவும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.